பெரியபட்டினம்
பெரியபட்டினம் | |||||||
— Village — | |||||||
அமைவிடம் | 9°16′21″N 78°54′08″E / 9.272625°N 78.902328°ECoordinates: 9°16′21″N 78°54′08″E / 9.272625°N 78.902328°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 9,478 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 8 மீட்டர்கள் (26 அடி) | ||||||
குறியீடுகள்
|
பெரியபட்டினம் (Periyapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
வரலாறு
இராமநாதபுரம் நகருக்கு தென்கிழக்கே இருபது கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதூதா, மார்க்கோ போலோ போன்றவர்கள் வந்திறங்கிய வரலாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திகழ்ந்துள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம் [3] [4] என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும்,பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால் டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும்[5] இன்று பெரியபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு கடல்தொழில் முக்கியத்தொழிலாக இருக்கிறது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [6] [7]
மாநிலம் பெயர்: தமிழ்நாடு (33) |
---|
மாவட்ட பெயர்: ராமநாதபுரம் (626) |
துணை மாவட்ட பெயர்: ராமநாதபுரம் (05860) |
டவுன் பெயர்: பெரியபட்டினம் (CT) (642165) |
வார்டு பெயர்: பெரியபட்டினம் (CT) வார்டு எண்-0001 (0001) |
குடும்பங்களின் எண்ணிக்கை : 1777
ஜனத்தொகை | நபர் | ஆண் | பெண் |
---|---|---|---|
மொத்தம் | 9730 | 5099 | 4631 |
வயது 0-6 ஆண்டுகள் | 1100 | 520 | 580 |
தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) | 338 | 195 | 143 |
பழங்குடியினர் (எஸ்டி) | 0 | 0 | 0 |
எழுத்தறிவுள்ளவர்களின் | 7344 | 4098 | 3246 |
எழுதப்படிக்க தெரியாத | 2386 | 1001 | 1385 |
மொத்த பணியாளர் | 2313 | 2176 | 137 |
முதன்மை பணியாளர் | 1950 | 1871 | 79 |
முதன்மை பணியாளர் - கலப்பை | 16 | 15 | 1 |
முதன்மை பணியாளர் - விவசாய கூலிகளாக | 296 | 287 | 9 |
முதன்மை பணியாளர் - வீட்டு இண்டஸ்ட்ரீஸ் | 20 | 11 | 9 |
முதன்மை பணியாளர் - பிற | 1618 | 1558 | 60 |
குறு பணியாளர் | 363 | 305 | 58 |
குறு பணியாளர் - கலப்பை | 15 | 7 | 8 |
குறு பணியாளர் - விவசாயம் தொழிலாளர்கள் | 4 | 4 | 0 |
குறு பணியாளர் - வீட்டு இண்டஸ்ட்ரீஸ் | 4 | 0 | 4 |
குறு தொழிலாளர்கள் - இதர | 340 | 294 | 46 |
குறு பணியாளர் (3-6 மாதங்கள்) | 346 | 295 | 51 |
குறு பணியாளர் - கலப்பை (3-6 மாதங்கள்) | 15 | 7 | 8 |
குறு பணியாளர் - கலப்பை (3-6 மாதங்கள்) | 4 | 4 | 0 |
குறு பணியாளர் - விவசாயம் தொழிலாளர்கள் (3-6 மாதங்கள்) | 0 | 0 | 0 |
குறு பணியாளர் - வீட்டு இண்டஸ்ட்ரீஸ் (3-6 மாதங்கள்) | 327 | 284 | 43 |
குறு பணியாளர் - பிற (3-6 மாதங்கள்) | 17 | 10 | 7 |
குறு பணியாளர் - கலப்பை (0-3 மாதங்கள்) | 0 | 0 | 0 |
குறு பணியாளர் - விவசாயம் தொழிலாளர்கள் (0-3 மாதங்கள்) | 0 | 0 | 0 |
குறு பணியாளர் - வீட்டு இண்டஸ்ட்ரீஸ் (0-3 மாதங்கள்) | 4 | 0 | 4 |
குறு பணியாளர் - மற்ற தொழிலாளர்கள் (0-3 மாதங்கள்) | 13 | 10 | 3 |
அல்லாத பணியாளர் | 7417 | 2923 | 4494 |
கல்வி
பெரியபட்டினம் மேல்நிலை பள்ளி. இதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை கல்வி வசதிகள் உள்ள பள்ளி ஒன்றாகும். இளைஞர்கள் இப்போதெல்லாம் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்குச் சென்று கல்வி கற்கிறார்கள்.
பிரபலமான பள்ளிகள் சில
- அரசு மேல்நிலைப் பள்ளி- பெரியபட்டிணம் தேர்வு தேர்ச்சி 98%
- நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி - இராமநாதபுரம்
- எம்.ஜி. பொது மெட்ரிகுலேஷன் பள்ளி - இராமநாதபுரம்
- செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி - இராமநாதபுரம்
- நபிஸா அம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி - இராமநாதபுரம்
- ஆல்வின் மெட்ரிக் பள்ளி - இராமநாதபுரம்
- வேலூமாணிக்கம் மெட்ரிக் பள்ளி - வாணி- இராமநாதபுரம்
பிரபலமான கல்லூரி சில
- தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி (பெண்கள்) - கீழக்கரை
- முகமது சதக் பொறியியல் கல்லூரி - கீழக்கரை
- முகமது சதக் பாலிடெக்னி கல்லூரி - கீழக்கரை
- செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கீழக்கரை
- செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இராமநாதபுரம்
- செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி - இராமநாதபுரம்
- கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முத்துப்பேட்டை
சிறப்புகள்
வெற்றிலை (Betel)
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எங்கள் ஊர் வெற்றிலை (Betel) தான் சிறந்தது. மாவட்டத்திலேயே அதிகமாக பயிர்செய்யபடுகிறதும் இங்குதான். பெரியபட்டினம் வெற்றிலை என்றால் நல்ல இளம் பச்சை நிறைத்தில் குறைந்த காரமுடன் நல்லா சிவக்கும் தன்மை கொண்டது. இங்கு பயிர்செய்யபடும் வெற்றிலை இதற மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். “கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை””இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை” என்று சொல்வார்கள். ஆண்டாண்டு காலமாக பயிரிட்டு வந்த ”வெற்றிலை கொடிக்கால்” முன்பு மாதிரி இப்பொழுது இல்லை தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் பற்றாக்குறை எல்லாரும் வெளிநாட்டு மோகமூம், பண்ணை நிலங்கள் வீட்டுநிலமாகவும் மாறியதால் சிறிது அளவே பயிர்செய்யப்படுகிறது.
விளையாட்டு
பெரியபட்டினம் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் கபடி. இராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிக பெரிய கிரிக்கெட் மைதானம் இங்குதான் உள்ளது. இங்கு மாவட்ட கிரிக்கெட் லீக் மற்றும் கால்பந்து போட்டிகளில் பல நடத்தியிருந்தது. இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணியில் பிரபலமானவர்கள்
உணவு
பெரியபட்டினம் மக்கள் நடைமுறையில் உணவு பழக்கம் இலங்கை தமிழ் முஸ்லீம் உணவு மற்றும் மலாய் உணவு ஒற்றுமைகள் இருக்கின்றன. உதாரணமாக ஆப்பம், இடியாப்பம், வட்டலப்பம் [8], போன்ற உணவுகள். பெரியபட்டினம் மக்கள் உணவு நடைமுறையில் பெரும்பாலான கடற்கரை பகுதிகளில் வாழும் கடல் சார்பை பின்பற்றியே இருக்கின்றனர்.
- மீன் குழம்பு (Fish Curry)[9]
- கருவாட்டு குழம்பு (Dryfish Curry) [10]
- தேங்காப் பால் ரசம் (Coconut Milk Rasam)[11]
- இறால் (Prawns)[12]
- நண்டு (Crab) [13]
பஸ் வழித்தடங்கள்
பஸ் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இலக்கு புள்ளி அல்லது 60 நிமிடங்களில் அதிகபட்சமாக சென்றடையும் ........
பேருந்து எண் | பஸ் வகை | புறப்பாடும் இடம் இராமநாதபுரம் சேறுமிடம் பெரியபட்டினம் | புறப்பாடும் இடம் பெரியபட்டினம் சேறுமிடம் இராமநாதபுரம் | வழித்தடங்கள் |
---|---|---|---|---|
4 | அரசு பஸ் TNSTC | 04:15 AM (VIA: ரெகுநாதபுரம்) | 05:00 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4A | அரசு பஸ் TNSTC | 04:25 AM (VIA: ரெகுநாதபுரம்) | 05:00 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4B | அரசு பஸ் TNSTC | 04:35 AM (VIA: ரெகுநாதபுரம்) | 05:15 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4C | அரசு பஸ் TNSTC | 04:45 AM (VIA: ரெகுநாதபுரம்) | 05:30 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4D | அரசு பஸ் TNSTC | 05:00 AM (VIA: ரெகுநாதபுரம்) | 05:45 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4E | அரசு பஸ் TNSTC | 05:15 AM (VIA: ரெகுநாதபுரம்) | 06:00 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
4F | அரசு பஸ் TNSTC | 05:25 AM (VIA: ரெகுநாதபுரம்) | 06:15 AM (VIA: ரெகுநாதபுரம்) | முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், வழுதூர், வாலாந்தரவை, வாணி, பாரதி நகர், இராமநாதபுரம். |
*ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் காலை 4:15 மணி முதல் இரவு 9:45 மணி வரை கிடைக்கும்,.
|
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ South India and Her Muhammadan Invaders by Krishnaswami S. Aiyangar.
- ↑ South India and Her Muhammadan Invaders by Krishnaswami S. Aiyangar.
- ↑ http://jahubar.xtgem.com/Jali_Ppm1.PNG Science and civilisation in China, Volume 6, Part 3 By Joseph Needham, Christian Daniels, Nicholas K. Menzies
- ↑ http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=33&district_code=27 - Rural- Ramanathapuram District;Ramanathapuram Taluk;Periapattinam Village 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
- ↑ http://www.censusindia.gov.in/pca/final_pca.aspx - Rural- Ramanathapuram District;Ramanathapuram Taluk;Periapattinam Village 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
- ↑ Vatlappam Recipe. http://www.indianfoodrecipes.co.in/egg-coconut-pudding
- ↑ மீன் குழம்பு http://tamilnadurecipes.com/2009/02/07/fish-curry-meen-columbu/
- ↑ கருவாட்டு குழம்பு http://www.tastyappetite.net/2013/03/how-to-make-chettinad-karuvadu-kuzhambu.html#.UzO5pPmSwXs
- ↑ தேங்காப் பால் ரசம் http://www.indiantamilrecipe.com/vegetarian/rasam/coconut-milk-rasam-recipe
- ↑ இறால் குழம்பு http://www.flavorsofmumbai.com/prawns-curry-south-indian-style/
- ↑ நண்டு குழம்பு http://mysouthernflavours.com/2015/02/08/south-indian-style-crab-curry-gravy-masala/
வெளி இணைப்புகள்
- [1][தொடர்பிழந்த இணைப்பு] பற்றிய தமிழக கல்வெட்டியல்துறையினரின் கட்டுரை.