பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் அமிலம்
படிமம்:Benzoquinonetetracarboxylic acid.svg.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,6-டையாக்சோசைக்ளோயெக்சா-1,4-டையீன்-1,2,4,5-டெட்ராகார்பாக்சிலிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 310781 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 350050 |
| |
பண்புகள் | |
C10H4O10 | |
வாய்ப்பாட்டு எடை | 284.14 கிராம்/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,4-பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் அமிலம் (1,4-benzoquinonetetracarboxylic acid ) என்பது C10H4O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டை (C6O2)(-(CO)OH)4 என்ற வாய்ப்பாட்டாலும் எழுதி இச்சேர்மத்தை பாரா-பென்சோகுயினோன் ( C6H4O2,) வழிப்பெறுதியாகப் பார்க்கப்படுகிறது. பாராபென்சோகுயினோனில் உள்ள நான்கு ஐதரசன் அணுக்கள் கார்பாக்சில் வேதி வினைக்குழுக்களால் -(CO)OH பதிலீடு செய்யப்பட்டு இச்சேர்மம் உருவாவதாக கருதுகிறார்கள். நான்கு புரோட்டான்கள் நீக்கப்படுவதால் இவ்வமிலம் பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலேட்டு C10O4−10 எதிர்மின் அயனியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வயனி ஆக்சிசன் மற்றும் கார்பன் அணுக்களால் மட்டும் ஆன ஆக்சோகார்பன் எதிர்மின் அயனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு புரோட்டானாக இழக்கப்பட்டு 3 புரோட்டான்கள் வழியாக முறையே டிரையைதரசன் (C10H3O−10), டையைதரசன் (C10H2O2−10 ) மற்றும் ஐதரசன்பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனிகளாக உருவாகிறது. இதனுடன் தொடர்புடைய எசுத்தர்களுக்கும் இதே பெயர் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு தண்ணீர் மூலக்கூறுகளை நீக்குவதால் கார்பன் ஆக்சைடுகளில் ஒன்றான பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் இருநீரிலி C10O8 உருவாகிறது [1].
1,2,4,5- டெட்ராமெத்தில்பென்சீன் என அறியப்படும் டியூரினிலிருந்து டைநைட்ரோபைரோமெட்டிலிட்டிக், டையமினோபைரோபெட்டிலிக் அமிலங்கள் வழியாக இந்த அமிலம் பெறப்படுகிறது [2][3][4].
மேற்கோள்கள்
- ↑ P. R. Hammond (1963), 1,4-Benzoquinone Tetracarboxylic Acid Dianhydride, C10O8: A Strong Acceptor. Science, Vol. 142. no. 3591, p. 502 எஆசு:10.1126/science.142.3591.502
- ↑ B. I. Zapadinskii, B. I. Liogon'kii, and A. A. Berlin (1973), Syntheses of Tetracarboxylic Acids. Russian Chemical Reviews, volume 42 issue 11, page 939. Online version accessed on 2010-01-03.
- ↑ J. U. Nef (1887), Annalen, volume 237, page 19. Cited by Zapadinskii et al.
- ↑ J. U. Nef (1890), Annalen, volume 258, page 282. Cited by Zapadinskii et al.