பெனத்தாரான் கோவில்
8°0′58″S 112°12′33″E / 8.01611°S 112.20917°E
பெனத்தாரான் (Penataran அல்லது Panataran, Indonesian: Candi Penataran) என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிலித்தார் நகரில் இருந்து வடக்கே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்ப்பப்படுகிறது. இது மயாபாகித்து பேரரசு காலத்தில் குறிப்பாக ஹயாம் வுரூக் பேரரசரின் ஆட்சியில்[1] அவரது முக்கிய வழிபாட்டிடமாக முக்கியத்துவம் பெற்று விளங்கியது.[2]:241
பெனத்தாரான் கோவில் கேதிரி காலத்தில் இருந்து பெயர் பெற்று விளங்கியுள்ளது. கிருஷ்ணயானா (பாகவத புராணம்) காவியக் கவிதை இதனை சித்தரிக்கிறது.[2]:158 இக்கோவில் "பலா" கோயில் என "நகரகிரேத்தகாமா" என்ற பண்டைய கிழக்கு சாவக புகழஞ்சலிக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அயாம் புரூக் பேரரசர் தனது கிழக்கு சாவக அரச சுற்றுப் பயணத்தின் போது இக்கோவிலுக்கு வருகை தந்திருந்தார்.
இக்கோவிலும் அதன் சுற்றுப்புறமும் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
உலகப் பாரம்பரியக் களம்
இக்கோவில் யுனெசுக்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1995 அக்டோபர் 19 இல் பட்டியலிடப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Penataran Temple - One of Majapahit Inheritance in Blitar". East Java.com. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2012.
- ↑ 2.0 2.1 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
- ↑ "Penataran Hindu Temple Complex". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.