பூலன்குளம்
Jump to navigation
Jump to search
பூலன்குளம் (Bulankulama) என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குளம். இந்தக் குளத்தின் பெயர் இலங்கையின் பழங்கால வரைப்படம் ஒன்றில் காணப்படுகிறது[1].
சொல்விளக்கம்
"புலன்குளம" என்பதில் "பூலன்" எனும் பெயர் தமிழில் வழங்கப்பட்ட ஒன்றா என்று தெரியவில்லை. "குளம" எனும் சொல்லில் உள்ள "குளம" எனும் சொல், சிங்களவர்கள் "குளம்" என்பதில் உள்ள குற்றை அகற்றிவிட்டு உச்சரிக்கும் வழக்காகும். சிங்களத்தில் குளத்திற்கு வெவ என்றே சொல்வதால், இக்குளத்தின் பெயர் தமிழ் பெயரென்பதை உறுதியாகக்கொள்ள முடியும்.[2] இது இப்பகுதியில் முன்னாள் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளின் ஒன்றாகக்கொள்ளலாம். அதற்கு அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதும், தமிழ் மன்னர்கள் பலர் ஆட்சி செய்த பகுதி என்பதும் காரணங்களாகும்.[3]