பூக்குழி (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பூக்குழி (Pyre) என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும், இது சமூகம், சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது.[1] இது முதலில் தமிழில் 2013 இல் வெளியிடப்பட்டது, பின்னர் [2] 2016 இல் அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புதினம் 2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.[3] 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் பரிசுப் போட்டிக்கான பதின்மூன்று நாவல்கள் கொண்ட நெடும்பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது. இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் நாவல் இதுவே.

இந்தப் புதினத்தின் தமிழ் பதிப்பு R. இளவரசன் என்ற தலித் இளைஞருக்கு சமர்ப்பிக்கபட்டது. அவரது சாதி மறுப்புத் திருமணத்தினால் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர் இரயில் பாதையில் இறந்து கிடந்தார். [4] [5]

கதைச் சுருக்கம்

இந்தப் புதினம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் காட்டுப்பட்டியில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாகத் திருமணமான குமரேசன் மற்றும் சரோஜா, கிராமத்தின் ஒரு பாறையில் இருக்கும் குமரேசன் வீட்டிற்குப் பேருந்தில் வருகிறார்கள்.தோளூரில் உள்ள சரோஜா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கின்றனர். சரோஜாவின் வேறு ஜாதி யாருக்கும் தெரியாது என்று குமரேசன் நம்புகிறார்.அவர்கள் வீட்டை அடைந்ததும், குமரேசனின் தாயார் மாராயி, தன் மகன் சரோஜாவை மணந்ததால் அவரைச் சபிக்கிறாள். புது மணப்பெண்ணைப் பார்க்கவும், திருமணத்தைப் பற்றி கிண்டல் செய்யவும் வீட்டிற்குத் திரண்டு வரும் பல கிராமவாசிகளின் கவனத்தை அவளது தோற்றம் ஈர்க்கிறது. சரோஜாவின் நிறத்தினால் அவர் வேறு சாதியினர் தான் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

நாட்கள் செல்லச் செல்ல, சரோஜா அவரது அத்தை மாராயியின் அவமானங்களையும், கிராமத்து மக்களின் கேள்விகளையும் அவளது சாதியைப் பற்றிய கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குமரேசனின் தாத்தா, பாட்டியிடம் அவர்கள் சென்றபோது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி அவரைத் தாக்குகிறார்கள். இவர்களின் சந்திப்பு பற்றி சரோஜா நினைவு கூறுகிறார். அதில் சரோஜாவின் பக்கத்து வீட்டுக்காரார் பாய் என்பவரின் வீட்டிற்கு சோடா பாட்டில் கொடுக்க வருகையில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனும் காரணத்தினால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கின்றனர்.

அவர்களின் ஊர் பஞ்சாயத்தில் இந்த இருவரையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக முடிவெடிக்கின்றனர். இவர்களது தூரத்து உறவினரிடம் இருந்து பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. குமரேசன், சோடாபாட்டில் விற்பனை மூலம் வாழ்வில் முன்னேற முயற்சிக்கிறார்.சரோஜாவை தன்னுடன் விரிச்சிபாளையத்திற்கு அழைத்துச் செல்கிறார், அங்கு அவர் நண்பர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தில் ஒரு கடையைத் திறக்கிறார். தட்டு நிறைய பரிசுப் பொருட்களுடன் விழாவிற்குச் செல்ல கருதுகிறார். ஊர் மக்களுடன் சேர்ந்து செல்வதைத் தவிர்த்து நேரடியாகக் கோவிலுக்கே செல்கிறார். ஆனால், அங்கு அவார்து மாமாவால் அவமானப்படுத்தப்படுகிறார், உடனடியாக வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்.

வீட்டிற்குத் திரும்பிய குமரேசன், சரோஜா கர்ப்பமாக இருப்பதை அறிகிறார். குழந்தைக்காகவாவது தன்னுடன் இந்தக் கிராமத்தை விட்டு வெறியேறுவார் என சரோஜா நம்புகிறார். கடைக்குச் சென்று இரு நாட்களுக்குப் பின் வருவதாக குமரேசன் கூறுகிறார். ஆனால், எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு வீடு திரும்புமாறு சரோஜா அவரை வற்புறுத்துகிறார்.அன்றிரவு, சரோஜா மலம் கழிப்பதற்காக பாறையின் அருகே உள்ள புதர்களுக்குச் செல்கிறாள், குமரேசன் இல்லாத நேரத்தில் மாராயி மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து அவளைக் கொல்ல சதி செய்வதைக் கேட்கிறாள். பிடிபடக் கூடாது என்று தீர்மானித்து, புதர்ச் செடிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் என்பதை ஊர் மக்கள் உணர்ந்ததும், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் புதர்களைக் கொளுத்திவிடுகிறார்கள்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=பூக்குழி_(புதினம்)&oldid=19803" இருந்து மீள்விக்கப்பட்டது