புஷ்கர்-காயத்ரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புஷ்கர்-காயத்ரி
Pushkar-Gayathri at the Brew Person Of The Year Awards 2017.jpg
தேசியம் இந்தியா
கல்விதிரைப்படத் தயாரிப்பில் நுண்கலை
படித்த கல்வி நிறுவனங்கள்காட்சி தொடர்பு வடிவமைப்பில் இளங்கலை, இலயோலாக் கல்லூரி, சென்னை

காயத்ரி- முதுகலை, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், சிகாகோ

புஸ்கர்- முதுகலை, நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகம்,
பணிதிரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள்
செயற்பாட்டுக்
காலம்
2007 — தற்போது வரை

புஷ்கர்-காயத்ரி ( Pushkar–Gayathri ) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு கணவன்-மனைவி திரைப்பட இயக்குநர்கள் ஆவர். இவர்களின் படைப்புகள் அவற்றின் தனித்துவமான பாணி, தொழில்நுட்ப நுணுக்கம் மற்றும் நுணுக்கமாக பின்னப்பட்ட கதைக்களங்களுக்காக குறிப்பிடப்படுகின்றன.

தொழில் வாழ்க்கை

ஓரம் போ (2007), மற்றும் வ குவாட்டர் கட்டிங் (2010) ஆகிய தமிழ் திரைப்படங்களின் மூலம் இவர்கள் திரைக்கதை ஆசிரியர்களாகவும் மற்றும் இயக்குனர்களாகவும் தங்களதி திரை வாழ்க்கையைத் தொடங்கினர். 2017 இல், இவர்கள் எழுதி இயக்கிய விக்ரம் வேதா, அந்த ஆண்டு பல விருதுகளை வென்றது.[1]
[2] மேலும் ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் 2017 இன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற இந்தியத் திரைப்படமானது. 2022 இல், கிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகிய இருவை வைத்து விக்ரம் வேதாவை இந்தியில் மறு ஆக்கம் செய்தனர். இருப்பினும், அசல் தமிழ் பதிப்பைப் போலல்லாமல், இது கலவையான விமர்சனங்களுக்கு ஆளானது. மிகப்பெரிய வணிகத் தோல்வியைச் சந்தித்தது.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல்: த வோர்டெக்ஸ் என்ற தமிழ் மொழி வலைத்தொடர் மூலம் இவர்கள் இயக்குநர்களானார்கள்.[3][4][5][6][7]

தங்களின் தயாரிப்பு நிறுவனமான வால்வாட்சர் பிலிம்ஸின் கீழ், புஷ்கரும் காயத்ரியும் அமேசான் பிரைம் வீடியோவுக்காக, சுழல்: த வோர்டெக்ஸ் மற்றும் வதந்தி: தி ஃபேல் ஆஃப் வெலோனி ஆகிய இரண்டு நீண்ட வலைத் தொடர்களையும், நெட்ஃபிளிக்சுக்காக ஏலே என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளனர்.

விருதுகள்

இவர்கள் ஆனந்த விகடன் சினிமா விருது,[8] 65ஆவது தென்னிந்தியத் திரைப்பட விருது , நோர்வே தமிழ்த் திரைப்பட விருது,[9][10] 10ஆவது விஜய் விருதுகள் [11][12] போன்ற பல விருதுகளையும் வென்றுள்ளனர்.[13]

மேற்கோள்கள்

  1. "Ananda Vikatan Cinema Awards (2018)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  2. Upadhyaya, Prakash (11 January 2018). "Vijay's Mersal wins big at Vikatan Cinema Awards 2017 [See Complete Winners List"]. International Business Times இம் மூலத்தில் இருந்து 21 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180121155032/http://www.ibtimes.co.in/vikatan-cinema-awards-vijays-mersal-wins-big-ajith-bags-best-hard-working-actor-vivegam-756538. 
  3. "Trailer of 'Suzhal: The Vortex' featuring Aishwarya Rajesh, Parthiban and others, is out". The News Minute (in English). 2022-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  4. "Suzhal The Vortex trailer: Kathir, Aishwarya Rajesh promise a riveting thriller". The Indian Express (in English). 2022-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  5. "The scintillating trailer of tamil original series Suzhal – The Vortex is out now-South-indian-movies News, Firstpost". Firstpost (in English). 2022-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  6. V, NARAYANAN (2022-06-07). "Amazon Prime to make a splash in South India with original content". www.thehindubusinessline.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  7. "'Suzhal: The Vortex' trailer promises a thrill ride". Zee News (in English). 2022-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  8. "65th Filmfare Awards South winners: Vikram Vedha, Baahubali 2 and Thondimuthalum Driksakshiyum win big" (in en-US). The Indian Express. 2018-06-17. https://indianexpress.com/article/entertainment/tamil/65th-filmfare-awards-south-winners-vikram-vedha-baahubali-2-thondimuthalum-driksakshiyum-5221268/. 
  9. "9th NTFF 2018: Official selection & Winners of Tamilar Awards 2018 Tamil Nadu !". Norway Tamil Film Festival Awards. 26 சனவரி 2018. Archived from the original on 10 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2018.
  10. "News". Norway Tamil Film Festival Awards. Archived from the original on 10 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2018.
  11. Upadhyaya, Prakash (4 June 2018). [https://web.archive.org/ web/20180604112225/https://www.ibtimes.co.in/vijay-awards-2018-catch-live-updates-event-photos-complete-winners-list-770862 "Vijay Awards 2018: Here is the complete list of winners [Photos]"]. International Business Times இம் மூலத்தில் இருந்து 4 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/ web/20180604112225/https://www.ibtimes.co.in/vijay-awards-2018-catch-live-updates-event-photos-complete-winners-list-770862. 
  12. "Vijay Awards 2018: Nayanthara, Vijay Sethupathi, Mersal, Vikram Vedha Win Big; Check Out The Complete List of Winners Here | LatestLY". Latestly. 4 June 2018. https://www.latestly.com/entertainment/south/vijay-awards-2018-nayanthara-vijay-sethupathi-mersal-vikram-vedha-win-big-check-out-the-complete-list-of-winners-here-196445.html. 
  13. "In pictures: The South Indian International Movie Awards (SIIMA) in Dubai". 17 September 2018.
"https://tamilar.wiki/index.php?title=புஷ்கர்-காயத்ரி&oldid=21154" இருந்து மீள்விக்கப்பட்டது