புளியங்கூடல்
புளியங்கூடல் (Puliyankoodal) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத் தீவில் ஊர்காவற்றுறை தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இக்கிராமம் முற்று முழுதும் இந்துக்களையே பூர்வீகமாகக் கொண்டது.
முன்பு புளிய மரங்களும், நாவல் மரங்களும் நிறைந்து காணப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் அவை இருந்தமைக்கான அடையாளமே தெரியாமல் அருகிவிட்டது. புளியமரங்கள் நிறைந்து கூடலாக காணப்பட்டதால் இக்கிராமத்திற்கு புளியங்கூடல் என்ற காரணப்பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[1][2][3][4] வேலணை, சரவணை, சுருவில், நாரந்தனை மக்களுக்கெல்லாம் பொது வணிக நிலையமாக புளியங்கூடல் சந்தியே விளங்கி வருகிறது. விவசாயத்திற்கு தேவையான நீரை கிராஞ்சி, குளுவந்தனை ஆகிய குளங்களிலிருந்து பெற முடிகிறது.
பாடசாலைகள்
புளியங்கூடல் மாணவர்களுக்கான பாடசாலையாக நடராசா வித்தியாலயம் விளங்கி வருகிறது. நடராசா வாத்தியார் என்பவரினால் தொடர்ந்த இப்பாடசாலை இன்று பல நூற்றாண்டுகளைக் கடந்து தனது கல்விச்சேவையைத் தொடர்கிறது.
விளையாட்டு
விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவ்வூர் மக்கள் அதற்கென புதுவெளி எனும் மைதானத்தை அமைத்து ஆண்டுதோறும் மாட்டு வண்டில் சவாரி, சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், வினோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம் என இன்னும் பல விளையாட்டுக்களை நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள கோயில்கள்
அவற்றுள் சில:[5]
- புளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் கோயில்
- இந்தன் முத்துவிநாயகர் ஆலயம்
- புளியங்கூடல் கதிர்காம கதிர்வேலாயுத சுவாமி கோவில்
- புளியங்கூடல் மேற்கு கிராஞ்சியம்பதி காட்டு வைரவர் ஆலயம்[6]
- முனியப்பர் கோவில்,
- புளியங்கூடல் தெற்கு வீரபத்திரர் ஆலயம்
- ஐயனார் கோவில்
- சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் தேவஸ்தானம்
துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
இவற்றையும் பார்க்கவும்
- ↑ "TamilNet: 19.09.10 Polgolla". TamilNet. September 19, 2010. https://www.tamilnet.com/art.html?artid=32651&catid=98.
- ↑ "TamilNet: 24.05.17 Puḷiyaṅ-kūṭal, Kāraik-kūṭal, Payirik-kūṭal/ Payilik-kūṭal". TamilNet. May 24, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25198.
- ↑ "Koṟpiṭṭi-ēṟṟam, Puḷiyaṭi-iṟakkam". TamilNet. January 11, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33374.
- ↑ "Taṭṭaiya-malai, Oṭṭara-kuḷam, Pālāvōṭai, Āṇṭiyā-puḷiyaṅkuḷam, Koṇṭalup-pilavu, Marutām-pulam". TamilNet. March 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25131.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "புளியங்கூடல் காட்டு வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்! - 29 மார்ச் 2015". http://raviespuliyankoodal.blogspot.com/2015/03/blog-post_29.html.