புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புலோலியூர்
ஆ. இரத்தினவேலோன்
PulloliYoor.jpg
முழுப்பெயர்
பிறப்பு 25-12-1958
புலோலி தெற்கு,
புட்டளை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்,
பதிப்பாளர்
கல்வி புற்றளை
மகாவித்தியாலயம்
ஹாட்லிக் கல்லூரி


புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் (டிசம்பர் 25, 1958 யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புட்டளை, புலோலி, இலங்கை).ஈழத்து எழுத்தாளர். ஈழத்துப் பதிப்பாளர். கொழும்பு மீரா பதிப்பகத்தின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதழ்களில் நூல் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நூல் அறிமுகக் கட்டுரைகளும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இப்பொழுது தினக்குரலில் பணியாற்றுகிறார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் முதல் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

வெளிவந்த நூல்கள்

  • புதிய பயணம் (சிறுகதைகள்)
  • விடியட்டும் பார்ப்போம் (சிறுகதைகள்)
  • நிலாக்காலம் (சிறுகதைகள்)
  • விடியலுக்கு முன் (சிறுகதைகள்)
  • நெஞ்சாங்கூட்டு நினைவுகள் (சிறுகதைகள் 2006)
  • திக்கற்றவர்கள் (சிறுகதைகள்)
  • புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள் (பத்தி எழுத்துக்கள்)
  • அண்மைக்கால அறுவடைகள் (பத்தி எழுத்துக்கள்)
  • புலோலியூர் சொல்லும் கதைகள்
  • இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்துச் சிறுகதைகள்

வெளி இணைப்புகள்