புலன் (பாட்டின் வனப்பு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புலன் என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

தெருக்களில் மக்கள் பேசும் மொழியால் பாப் புனைந்து மக்கள் ஆராயாது எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்யுள் செய்யப்படுமேல் அது புலன் என்னும் வனப்பாகும். [1]

எடுத்துக்காட்டு

பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ
வார்செறி முரசின் வாங்கி ஒன்னார்
மலை முற்றின்றே வயங்கு துளி சிதறிச்
சென்று அவள் திருமுகம் காணக் கடுந்தேர்
இன்று புகக் கடவுமதி பாக உதுக்காண்
மாவொடு புணர்ந்த மாஅல் போல
இரும்பிடி உடையது ஆகப்
பெருலகாடு மடுத்தக் காமக் களிறே

யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல். [2]

அடிக்குறிப்பு

  1. சேரி மொழியான் செவ்விதின் கிளந்து
    தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
    புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. – தொல்காப்பியம் செய்யுளியல் 233

  2. (இளம்பூரணர் கணக்கில் இது அக்காலச் சேரிமொழிப் பா.)
"https://tamilar.wiki/index.php?title=புலன்_(பாட்டின்_வனப்பு)&oldid=20591" இருந்து மீள்விக்கப்பட்டது