புலனாய்வு (2019 திரைப்படம்)
புலனாய்வு | |
---|---|
இயக்கம் | ஷாலினி பாலசுந்தரம், சதீஷ் நடராஜன் |
கதை | ஷாலினி பாலசுந்தரம், சதீஷ் நடராஜன் |
இசை | ஜெய் ராகவீந்திரா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சதீஷ் நடராஜன் |
படத்தொகுப்பு | சதீஷ் நடராஜன் |
வெளியீடு | 14 நவம்பர் 2019 (மலேசியா) |
ஓட்டம் | 1 மணி 58 நிமிடங்கள் |
நாடு | மலேசியா |
மொழி | தமிழ் |
புலனாய்வு என்பது 2019ஆம் வெளிவந்த மலேசிய தமிழ் மொழி காதல் குற்றத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து சதீஸ் புதிய இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். படத்தில், ஒரு தம்பதியினர் தங்கள் கல்லூரியில் திடீரென நடக்கும் ஒரு கொலையில் சிக்கி, அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதற்கிடையில், ஒரு பெண் போலீஸ்காரர் சில சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்.[1][2]
இத் திரைப்படம் மலேசியாவில் 14 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. உள்ளூர் தமிழ் மொழி படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது.[3] மலேசியாவில் கிட்டதட்ட 64 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.[4]
கதைச்சுருக்கம்
ஐஸ்வர்யா ஒரு கல்லூரி மாணவி. இப்போதுதான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்குகிறாள். அவள் முந்தைய காதல் உறவில் இருந்து முறிந்து மனம் மாற முயற்சிக்கிறாள். எனவே, அவளுடைய புதிய நண்பன் அவளுக்காக விழுந்து விழுந்து கவனித்து அவளுடைய அன்பையும் கவனத்தையும் சம்பாதிக்க கடுமையாக முயற்சிக்கும்போது அவளுக்கு அக்கறை இல்லை. அவர்களின் காதல் கதை உருவாகும்போது, அவர்களின் கல்லூரியில் திடீரென ஒரு கொலை நிகழ்கிறது. இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு தொடர்பு உடையவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதற்கிடையில், பைரவி என்ற பெண் காவலர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். சில நபர்கள் மீது சந்தேகம் கொள்கிறார். அவர் சரியான கொலைகாரனைக் கண்டுபிடிப்பாரா?
நடிகர்கள்
- ஷைலா வி (ஷைலா நாயர்)
- ஷாலினி பாலசுந்தரம்
- கபில் கணேசன்
- சரண்குமார்
- கிருத்திகா நாயர்
- ஷப்பி லே
- ஷர்விந்
- கே.எஸ்.மணியம்
- சசிதரன்
- டெஸ்மண்ட் தாஸ்
- மர்தினி
- இர்பான் ஜெய்னி
- பாஷினி சிவகுமார்
- ராம்குமார் ரவிச்சந்திரன்
- பவித்திரா அன்பராசு
- சந்திரமோகன்
- நவின் சி ராஜமோகன்
- புன்கொடி
தயாரிப்பு
இப்படத்தில் காவல் அதிகாரியாக நடிப்பதற்கு ஷைலா இரண்டு மாதம் பயிற்சி செய்துள்ளார். பொதுவாக மிருதுவான பெண்ணிமை கதாபாத்திரத்தில் நடித்த ஷைலாவிற்கு கொஞ்சம் கடுமையாக காவல் அதிகாரியாக நடிப்பது சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.[1] இப்படத்தின் முன்தோற்றம் 21 ஆகத்து 2019 ஆம் தேதி யூடியுப்பில் வெளியிடப்பட்டது.[5]
இசை
இப்படத்தின் பாடல்கள் 03 அக்டோபர் 2019 ஆம் நாள் கோலாலம்பூரில் ஒரு சிறிய விழாவில் வெளியிடப்பட்டது. மலேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஹன்ஸ் ஐசக் பாடல்களை வெளியிட்டார்.[6] இப்படத்தின் பாடல் தொகுப்புகள் மூன்று பாடல்களைக் கொண்டுள்ளது. படத்திற்கு இசை அமைத்த ஜெய் ராகவீந்திராவிற்கு இப்படம் 52வது திரைப்படம். இப்படத்திற்காக சிம்பனி இசையமைப்பு முறை பயன்படுத்தியுள்ளார். அதற்காக வெளிநாடுகளில் இசைப்பதிவு செய்யப்பட்டது. சிம்பனி இசையை விருவிருப்பான குற்றத் திரைப்படத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க மென்பொருள் பயன்படுத்தி மாற்றம் செய்தது சவாலாக இருத்ததாகக் குறிப்பிட்டார். பாடல் மற்றும் பின்னணி இசைக்காக மூன்றரை மாதம் உழைத்து உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.[6] முதல் பாடல் ஜெய் ராகவீந்திராவின் இசை இயக்கத்தில் இந்திய பாடகர் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய "என் சோகேம்" பாடல் வெளியானது.[7][8]
புலனாய்வு | |
---|---|
ஒலித்தடம் புலனாய்வு
| |
வெளியீடு | 3 அக்டோபர் 2019 |
ஒலிப்பதிவு | 2019 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல் |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | டைம்ஸ் மியூசிக் |
வெளியான சில நாட்களிலேயே இப்பாடல் இரண்டு இலட்சம் பார்வைகள் பெற்றது.[6]
# | பாடல் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "என் சோகமே" | சக்திஸ்ரீ கோபாலன் | 4:45 | |
2. | "காதல் எங்கே" | குமரேஷ் | 4:39 | |
3. | "புலனாய்வு "(கரு)" | சின்மயி | 4:20 |
வரவேற்பு
11 நவம்பர் 2019ஆம் தேதி அன்று பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புக் காட்சியாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அக்காட்சியில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்பட்டது.[4] இத்திரைப்படத்தைப் பற்றி மலேசிய விமர்சகன் என்னும் விமர்சகர் சசிதரன் நடிப்பு "பண்பட்ட நடிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஷைலா நாயருக்கு அடுத்து, சசிதரனுக்காகவும் இந்தத் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.[9]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Women director, actresses tackle murder, mystery and romance in local Tamil film 'Pulanaivu'". Malay Mail.
- ↑ "A look at Pulanaivu, interview with Shaila V" (in Malay). Malaysia Gazette.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "'Pulanaivu' releasing in record-breaking number of cinemas in Malaysia". Astro Ulaagam.
- ↑ 4.0 4.1 "சபா சரவாக் உள்பட 64 மலேசியா திரைஅரங்குகளில் 'புலனாய்வு திரைப்படம் நாளை வெளியீடு!". 2019-11-13. Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
- ↑ "Pulanaivu - Official Teaser (Tamil)" (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
- ↑ 6.0 6.1 6.2 editor; Bhd, Selliyal Sdn. "Local Tamil movie "Pulanaivu" makes breakthrough with contemporary symphony orchestra" (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Shaktisree Gopalan to write songs for 'Pulanaivu'". Astro Ulaagam. http://www.astroulagam.com.my/entertainment/article/111464/shaktisree-gopalan-to-give-another-malaysian-hit-ensogame-pulanaivu.
- ↑ "Local tamil movie 'Pulanaivu' makes breakthrough with contemporary symphony orchestra". Bernama News.
- ↑ 'புலனாய்வு' திரைப்படத்தில் சசிதரனின் பண்பட்ட நடிப்பு!