புறத்திணை நன்னாகனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புறத்திணை நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் ஓய்மான் நல்லியாதனைப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அது புறநானூறு 376 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

புலவர் வறுமையில் நரகவேதனைப் பட்டதாகவும், பொழுது இறங்கிய மாலை வேளையில் நல்லியாதனிடம் சென்று பாடியதாகவும், நல்லியாதன் அன்றிரவே புலவரின் வறுமையையெல்லாம் போக்கியதாகவும் இந்தப் பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்னாகனார் என்னும் புலவர் ஒருவர் உள்ளார். அவரிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்ட இவரைப் 'புறத்திணை' என்னும் அடைமொழி தந்து குறிப்பிடலாயினர்.

பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை இவரும் நன்னனாகனாரும் ஒருவரே எனக் கொண்டு பாடல்களைத் தொகுத்துள்ளார்.[1]

அடிக்குறிப்பு

  1. சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரிநிலையம் கெளியீடு 1967
"https://tamilar.wiki/index.php?title=புறத்திணை_நன்னாகனார்&oldid=11956" இருந்து மீள்விக்கப்பட்டது