புதிய வானம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதிய வானம் என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளிவந்தத முற்போக்கு இதழ் ஆகும்.

வரலாறு

புதிய வானம் இதழ் 1975 செப்டம்பர் மாதம் தோன்றியது. இந்த இதழானது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளை தயாரித்து வெளியிட்ட முற்போக்கு இலக்கிய இதழ் ஆகும். இதன் பொறுப்பாசிரியராக அ. இராஜேந்திரனும், ஆசிரியராக செந்திலும் ஆசிரியக் குழுவில் பொன்னீலன், ஜெகன், தாமரை நடராசன், க. பிரம்மநாயகம், அருண் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர். இந்த இதழில் குமரி மாவட்டத்தில் உள்ள எழுத்தார்வம் கொண்ட இளைஞர்களும் பல முற்போக்குப் பத்திரிகைகளில் எழுதி வந்த பலரும் கவிதைகள், கதைகள் எழுதினார்கள். இந்த இதழில் கவிதைகளே அதிகம் இடம் பெற்றன. சமுதாயப் பார்வையோடு கதைகள், கவிதைகள் எழுதவேண்டும் என்ற முற்போக்கு இலக்கிய உணர்வை அது இளைஞர்களிடம் தூண்டி விட்டது. புதிது புதிதாகப் பலர் எழுதலானார்கள்.

திறணாய்விலும் புதிய் வானம் அக்கறை காட்டியது. அவ்வப்போது சில புத்தகங்களுக்கு ஆய்வுரை எழுதியது. கவிமணியின் கையறு நிலைப் பாடல்கள் என்ற ஒப்பியல் திறனாய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து வெளியிட்டது. நாட்டுப் பாடல்களைத் தொகுத்து இதழ் தோறும் வெளியிட்டு வந்தது.

1975 செப்டம்பர் மாதம் தோன்றிய இதன் 1977 சனவரி இதழை (14) ஜீவா மலர் ஆகவும், அக்டோபர் இதழை (16) பாரதி மலராகவும் வெளியிட்டது. இடையில் ஏற்பட்ட தேக்கம் 16ஆம் இதழுக்குப் பிறகு நீண்ட காலம் கழித்து அதாவது மூன்று வருடங்கள் கழிந்து. மீண்டும் 1980 அக்டோபரில் 17ஆம் இதழ் வெளியானது. அதில் இனி இருமாத இதழாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.[1] என்றாலும் இது நீண்டகாலம் வெளியாகவில்லை.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புதிய_வானம்_(இதழ்)&oldid=17682" இருந்து மீள்விக்கப்பட்டது