புதினாலங்காரி
புதினாலங்காரி இலங்கை கொழும்பிலிருந்து 1876 ம் ஆண்டு வெளிவந்த வார இதழாகும்.
கருத்து
இலங்கையில் பொதுவாக செய்தி அல்லது பெருங்கதை புதினம் என 19ம் நூற்றாண்டுகளிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளிலும் அழைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு "புதின' என்பது செய்தி என பொருள்கொள்ளப்படுகின்றது. "புதின அலங்காரி" தான் "புதினாலங்காரி" ஆயிருக்க வேண்டும். எனவே இதுவொரு வாராந்த செய்தி இதழாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆசிரியர்
- நெ. ம. வாப்பு மரைக்காயர்
இதழ் முகப்பு
புதினாலங்காரி இதழின் முகப்பில் பிறையும், பொழுதும் முத்திரையிடப்பட்டிருந்தது. பொதுவாக பிறையும், பொழுதும் முத்திரையே இஸ்லாமியர்கள் பயன்படுத்துவர். இன்றுகூட இஸ்லாமிய நிகழ்வுகளை அடையாளப்படுத்த இந்த பிறையும், பொழுதும் முத்திரை பயன்படுத்தப்படுகின்றது. எனவே புதினாலாங்கரி ஓர் இஸ்லாமிய இதழாக கொள்ளப்படுகின்றது.
உள்ளடக்கம்
இதுவொரு செய்தி இதழ் என்ற அடிப்படையில் நாட்டின் முக்கிய செய்திகளைத் வாராந்தம் தொகுத்து வெளியிட்டு வந்துள்ளது. அதேநேரம், இலங்கை இஸ்லாமியர்களின் செய்திகளுக்கும் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும் வந்துள்ளது.
அரபுத் தமிழும் கலந்தது
புதினாலங்காரி தமிழில் வெளிவந்தாலும்கூட அரபுத் தமிழும் கலந்திருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)