பீ. மு. அஜ்மல்கான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பீ. மு. அஜ்மல்கான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பீ. மு. அஜ்மல்கான்
பிறந்ததிகதி நவம்பர் 6, 1952
அறியப்படுவது எழுத்தாளர்

பீ. மு. அஜ்மல்கான் (பிறப்பு: நவம்பர் 6, 1952), மதுரை எஸ்.எஸ். காலனி, அருணாசலம் குறுக்குத்தெருவில் வசித்துவரும் இவர் கம்பம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் தமிழியல் துறைத்தலைவரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான இவர், மொழியியல், மலையாளம், காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் பட்டயமும், அரபு மொழிபெயர்ப்பு, கல்வெட்டு ஆகியவற்றில் சான்றிதழும் பெற்றவர். மேலும் பிரமலைக் கள்ளர் பேச்சுத் தமிழ் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

எழுதிய நூல்கள்

  • இஸ்லாமியத் தமிழலக்கிய வரலாறு தொகுதி 01
  • இஸ்லாமியத் தமிழலக்கிய வரலாறு தொகுதி 02
  • இஸ்லாமியத் தமிழலக்கிய வரலாறு தொகுதி 03
  • இஸ்லாமியத் தமிழலக்கிய வரலாறு தொகுதி 04
  • இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்
  • தமிழக்கத்தில் முஸ்லிம்கள்
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் விவரக் கோவை

அத்துடன் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

கருத்தரங்குகளில்

இலங்கையில் நடைபெற்ற 4வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்றவர். பல்வேறு தேசிய, உலக கருத்தரங்குகளில் பங்கேற்றுமுள்ளார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=பீ._மு._அஜ்மல்கான்&oldid=5099" இருந்து மீள்விக்கப்பட்டது