பி. பி. காந்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. பி. காந்தம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பி. பி. காந்தம்
பிறந்ததிகதி சனவரி 2 1930
அறியப்படுவது எழுத்தாளர்

பி. பி காந்தம் (பிறப்பு: சனவரி 2 1930) தமிழ்நாட்டில் பிறந்த இவர் தனது ஆறு வயதில் மலேயாவுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு லயோலா கல்வி நிலையம், எம்.பி.எஸ். பள்ளி ஆகியவற்றில் கற்றார்.

தொழில்

ஆங்கிலம், தமிழ், இந்தி. மலாய், ஜப்பான் ஆகிய மொழிகளில் நன்கு புலமைமிக்க இவர், ஆசாத் ராணுவப் பள்ளியில் இணைந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். சுமார் 30 ஆண்டுகள் சிங்கப்பூர் துறைமுக ஆணைக் கழகத்தில் காவல்துறைப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பதவிகள்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், தமிழர் சீர்த்திருத்தச் சங்கத்தின் தலைவராகவும், தமிழர் பேரவையின் துணைத் தலைவராகவும், பூன் லே இந்திய கலாசாரக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் ஜனநாயகம் இதழின் கேள்வி - பதில் பகுதிக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், அலை ஓசை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி

1946ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் படைப்பான 'எங்களின் இந்திய தேசிய இராணுவப் பயிற்சி' கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் ‘ஜனநாயகம்’ எனும் இதழில் வெளியானது. சிறுகதை, நாடகம், கட்டுரை முதலிய துறைகளில் இவருக்கு அதிக ஈடுபாடுண்டு.

எழுதியுள்ள நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • மரகதத் தெய்வம்
  • சீனக் கதைகள்
  • ஆறு
  • வயதான கிழவனும் வானம் போன்ற கடலும்

கட்டுரைத் தொகுப்பு

  • தூர தேசங்களின் சுகமான பயணங்கள்

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=பி._பி._காந்தம்&oldid=6034" இருந்து மீள்விக்கப்பட்டது