பி. ஜைனுல் ஆபிதீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி ஜைனுல் ஆபிதீன் (PJ)
பிறப்பு10 பெப்ரவரி 1953 (1953-02-10) (அகவை 71)
தொண்டி,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர்
இஸ்லாமிய பேச்சாளர் , எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று
அறியப்படுவதுஇஸ்லாமிய பிரச்சாரம்
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுதல்.
சமயம்இஸ்லாம்
உறவினர்கள்பீர் முஹம்மது (தந்தை)
மரியம் பீவி (தாய்)
பி. எஸ். அலாவுதீன் (சகோதரர்)
வலைத்தளம்
http://onlinepj.in/

பி. ஜைனுல் ஆபிதீன் ('பி.ஜே', பிறப்பு: பெப்ரவரி 10, 1953) ஒரு தமிழக இஸ்லாமிய மார்க்க அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனரும் ஆவார்.

அந்த அமைப்பின் விதிப்படி இவர் செய்த பாலியல் குற்றம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைப்பை விட்டு நீக்கப்பட்டார்.

பிறப்பும் கல்வியும்

பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பிறந்தார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் கற்று 'உலவி' என்னும் பட்டம் பெற்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். தமுமுகவின் மாநில அமைப்பாளராக செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எஸ். எம். பாக்கர் மற்றும் சிலரோடு தனியாகப் பிரிந்து 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார்.

பாலியல் குற்றச்சாட்டு நிரூபணம்

இவர் நடத்தி வரும் மூன் மார்ட் என்ற மளிகை கடைக்கு தின்பண்டங்களை வழங்கிவரும் ரம்ஜான் என்ற பெண்ணுடன் பிஜே ஆபாசமாக தொலைபேசியில் பேசியதாக ஒலிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதன் காரணமாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலை குழு இவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்தது. இவர் எந்தவித மாற்று கருத்தும் சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுத்து தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு இவரை நீக்கியது.[1][2][3]

மேலும் லீனா டீச்சர், குப்ரா, மம்மு பாத்திமா, ஜெரீனா என்று பல பெண்களுடன் இவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டுகளும் உள்ளன.[4]

மேற்கோள்கள்

  1. Abuthahir, A. Syed (19 May 2018). "ஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! | Jainulabdeen sex audio issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்". Archived from the original on 18 August 2019.
  2. Vijayanand.A (17 May 2018). "` நம்பக் கூடாதவர்களை நம்பிவிட்டேன்!' - கலங்கிய பி.ஜெ. | I had my faith on wrong persons, feels PJainulabdeen". Archived from the original on 18 August 2019.
  3. Vijayanand.A (16 May 2018). "' மொத்தம் 46; வெளியானது 3 ஆடியோ'! - பி.ஜெவின் வில்லங்கப் பேச்சு வெளியான பின்னணி | Out of 46, Only 3 PJ audios were released". Archived from the original on 18 August 2019.
  4. "ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்- உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
"https://tamilar.wiki/index.php?title=பி._ஜைனுல்_ஆபிதீன்&oldid=26193" இருந்து மீள்விக்கப்பட்டது