பி. எஸ். சூசைதாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. எஸ். சூசைதாசன்
P. S. Soosaithasan
இலங்கை நாடாளுமன்றம்
for மன்னார்
பதவியில்
1977–1983
முன்னையவர்எஸ். ஏ. ரகீம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-07-24)24 சூலை 1934
இறப்பு13 அக்டோபர் 2017(2017-10-13) (அகவை 83)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்கணக்காளர்
இனம்இலங்கைத் தமிழர்

பிலேசியன் சூசை சூசைதாசன் (Pilesiyan Sosai Soosaithasan, 24 சூலை 1934[1] – 13 அக்டோபர் 2017)[2] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

சூசைதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியின் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.[3] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[4].

சூசைதாசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் இவர் கூட்டமைப்புப் பட்டியலில் ஆறாவதாக வந்ததனால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.[5]

மேற்கோள்கள்

  1. "Soosaithasan, Pilesiyan Sosai". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Jeyaraj, D. B. S. (14 October 2017). "Former TULF Mannar MP Soosaithasan Passes Away at the Age of 83 in Sri Lanka". Archived from the original on 14 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  3. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  4. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
  5. "Parliamentary General Election - 2010 Vanni Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
"https://tamilar.wiki/index.php?title=பி._எஸ்._சூசைதாசன்&oldid=24299" இருந்து மீள்விக்கப்பட்டது