பில்லி கிரகாம்
| பிறப்பு | வில்லியம் ஃபிராங்க்ளின் கிரஹாம் Jr. |
|---|---|
| இறப்பு | February 21, 2018 (aged 99) |
| பணி | நற்செய்தியாளர் |
| தேசியம் | அமெரிக்கர் |
| துணைவர் | ரூத் கிரஹாம் (திருமணம். 1943–2007; இறப்பு) |
| பிள்ளைகள் | ஃபிராங்கிளின் நெல்சன் வர்ஜீனியா ஆனி ரூத் |
| இணையதளம் | www |
வில்லியம் பிராங்கிளின் அல்லது பில்லி கிரகாம் (Billy Graham, நவம்பர் 7, 1918 - பெப்ரவரி 21, 2018) அமெரிக்காவைச் சேர்ந்த கிறித்தவ நற்செய்தியாளர். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக[1] கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949-இல் தான். இவர் மிகப்பெரிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார். இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மிக ஆலோசகராக இருந்துள்ளார். அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர். குடிசார் உரிமைகள் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார். இதன் தொடர்ச்சியாக 1957-ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார். மேலும் 1960-ஆம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரைப் பிணையில் எடுத்துச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Indepth: Billy Graham". CBC இம் மூலத்தில் இருந்து December 11, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120629043419/http://www.cbc.ca/news/background/graham_billy/. பார்த்த நாள்: December 1, 2011.
- ↑ "Pilgrim Preacher: Billy Graham, the Bible, and the Challenges of the Modern World". Museum of the Bible. 21.4.2020