பிரியங்கா தேசு பாண்டே
பிரியங்கா தேசு பாண்டே | |
---|---|
2020இல் பிரியங்கா | |
பிறப்பு | பிரியங்கா தேசு பாண்டே 28 ஏப்ரல் 1992 கருநாடகம் |
கல்வி | எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை |
பணி | தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 — தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பிரவீண் குமார் (தி. 2016) [1] |
பிரியங்கா தேசுபாண்டே (Priyanka Deshpande) (பிறப்பு ஏப்ரல் 28,1992) இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் நடிகையும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறார். இந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.[2] ஊ சொல்ரியா ஊகும் சொல்ரியா, கலக்கப் போவது யாரு? , சூப்பர் சிங்கர் ஜூனியர், எயார்டல் சூப்பர் சிங்கர், தி வால் (தமிழ்), ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை அன்லைக்டு, அழகிய பெண்ணே, கிளிப்ஸ், ஜோடி நம்பர் ஒன் மற்றும் கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.[3] ராணி ஆட்டம் (2015) மற்றும் உன்னோடு வாழ்தல் வரமல்லவா (2016) போன்ற சில குறும்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார். ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் விஜய் தொலைக்காட்சி போன்ற பல்வேறு இந்திய தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பிரியங்கா பணியாற்றியுள்ளார். இவர் தொலைக்காட்சியின் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். [4][5][6][7]
பாடல்களை பாடும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவர் தோன்றியதன் மூலம், 2016 இல் சிறந்த பெண் தொகுப்பாளருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளைப் பெற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஆண்டு விழாவில் சிறந்த பெண் தொகுப்பாளர் விருதையும் வென்றார். 2018 ஆம் ஆண்டின் கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி-திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருதை பிரியங்கா மீண்டும் வென்றார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதே பரிந்துரைப் பிரிவை வென்றார். [8] [9] இவர் தனது யூடியூப் சமூக ஊடகத் தளத்தின் வெற்றிக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் பிளாக்சிப் டிஜிட்டல் விருதுகளால் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம் என்ற விருதையும் பெற்றார். [10] 2021 ஆம் ஆண்டில், இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 5 இல் ஒரு போட்டியாளராக இணைந்து முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [11]
தனிப்பட்ட வாழ்க்கை
பிரியங்கா தேசுபாண்டே 28 ஏப்ரல் 1992 அன்று கருநாடகாவில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்பே இவருடைய பெற்றோர் மகாராட்டிராவிலிருந்து கருநாடகாவுக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு ரோகித் தேசுபாண்டே என்ற ஒரு தம்பியும் இருக்கிறார். [12] பிரியங்கா சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு, செயின்ட் அந்தோணி பள்ளியில் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரியங்கா தனது நீண்ட கால காதலரான பிரவீன் குமாரை 2016 இல் திருமணம் செய்து கொண்டார். [13] [14] [15]
தொழில்
2022 ஆம் ஆண்டில் பிரியங்காவும் இவரது கணவர் பிரவீன் குமாரும் விவாகரத்து செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர் பிரியங்கா இது ஆதாரமற்ற வதந்தி என்று நிராகரித்தார். [16] [17]
பிரியங்கா 2009 இல் ஜீ தமிழ் சேனலில் திஸ் சிர்பி கேர்ள், அழகிய பெண்ணே மற்றும் இசை அன்ப்ளக்ட் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் சன் டிவியில் சேர்ந்து நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யின் சினிமா காரம் காப்பி என்ற நிகழ்ச்சியை ம கா பா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார். பிரியங்கா ஸ்டார் விஜய் குறிப்பாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற மூத்த நகைச்சுவை நடிகர்களான வையாபுரி மற்றும் ஆர்த்தியுடன் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பிரியங்காவும் அறிமுகமானார்.
2019 ஆம் ஆண்டில், பிரியங்கா ஸ்டார் விஜய்யில் ஸ்டார்ட் மியூசிக் என்ற தனது சொந்த நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஜே. தர்மேந்திரா இயக்கிய ராணி ஆட்டம் [18] மற்றும் உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா போன்ற பல்வேறு குறும்படங்களில் நடிகையாகவும் பிரியங்கா அறிமுகமானார். இரண்டு படங்களும் திரைப்பட நடிகர் விக்னேஷ் கார்த்திக்குடன் நடித்திருந்தார். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆகியவற்றிற்கான பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் தோன்றினார். இது சமூக ஊடகங்களிலும் பிரபலமாக இருந்த சோ சொக்கு வித் புகழ் என்ற இசைக் காணொளியிலும் பிரியங்கா தோன்றினார். [19]
பிரியங்கா ம கா பா ஆனந்த் உடன் இணைந்து தி வால் (தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி) என்ற சர்வதேச நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். [20] பாடலாசிரியர் யுகபாரதி பிரியங்காவை அணுகி, தேவராட்டம் படத்தில் "மதுர பளப்பளக்குது" பாடலை பாட வைத்தார். . இவருடன் இணை பாடகர்கள் நிவாஸ் கே. பிரசன்னா, விஜய் சேதுபதி மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோரும் பாடலைப் பாடினர். 2014 முதல், பிரியங்கா விஜய் தொலைக்காட்சி விருதுகளின் வருடாந்திர விழா மற்றும் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "Photo feature - Priyanka's sweet wishes to her husband!". www.indiaglitz.com (in English). March 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Priyanka Deshpande gets emotional as her show 'Start Music 2' goes off-air, watch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Priyanka Deshpande: A look at Tamil TV's highest-paid anchor's profile". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "WHEN ARE YOU GOING TO ACT AS A HEROINE?" TELEVISION SUPERSTAR VJ PRIYANKA ANSWERS (in English), 3 May 2021, பார்க்கப்பட்ட நாள் 2021-11-05
- ↑ "Television Superstar Priyanka apologises to actress Trisha on Twitter! - Know the reason". www.indiaglitz.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Vijay TV Anchor Priyanka Deshpande's Transformation Leaves Her Fans Awestruck". www.news18.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
- ↑ "Vijay TV Anchor Priyanka Refutes Reports That She is Acting in New Show". www.news18.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-22.
- ↑ "Who Is Priyanka Deshpande? Television Show Anchor In Bigg Boss Tamil 5". www.shethepeople.tv (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Kollywood television superstar Priyanka Deshpande". nettv4u.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Vijay Deverakonda makes Tamil TV anchor Priyanka Deshpande feel extremely special with a tight hug". www.bollywoodlife.com (in English). 23 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Priyanka Deshpande is the first runner up of Bigg Boss Tamil Season 5". www.indiatvnews.com. 17 January 2022.
- ↑ "Vijay TV Priyanka hospitalized suddenly". www.indiaglitz.com (in English). 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "நீயே இப்படி சொல்லலாமா பிரியங்கா: அவர் கதையை கேட்டு மற்ற போட்டியாளர்கள் ஷாக்". tamil.samayam.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Priyanka says she is married". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Reason why Priyanka did not speak about her husband". India Glitz (in English). 21 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
- ↑ "Vijay TV Fame Priyanka Deshpande's Divorce Rumours Continue; All You Need to Know". www.news18.com (in English). 21 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
- ↑ "Has Vijay TV presenter Priyanka parted ways with her husband?". www.indiaglitz.com (in English). 20 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-17.
- ↑ "Priyanka Deshpande short film". www.veethi.com (in English).
- ↑ "One Episode Made Priyanka Trending". www.newsbricks.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "Tamil Tv Show The Wall Synopsis Aired On Star Vijay Channel". nettv4u (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.