பிராங்க்புர்ட் தமிழ் மன்றம்
பிராங்க்புர்ட் தமிழ்மன்றம் டிசம்பர் 10, 1988 இல் செருமனி பிராங்க்புர்ட் நகரில் சிறீபதி சிவனடியாரின் தலைமையில், புலம்பெயர்ந்த செருமனிய மக்களைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த மேற்கு செருமன் தமிழர்களின் குழந்தைகளுக்கான தமிழ்க்கல்வி, ஜெர்மன் மொழியிலான அடிப்படை அறிவு, தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள், உலகத் தமிழர்களுடனான தொடர்பு போன்றவையே இம் மன்றத்தின் முன்னெடுப்பாக இருந்தது. தாயகத்தில் தமது படிப்பைத் தொடர முடியாத தமிழ்மாணவர்கள் செருமனியில் தமது படிப்பைத் தொடருவதற்கான உதவிகளையும் மேற்கு ஜெர்மன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சேவை அமைப்பின் மூலம் இம்மன்றம் செய்து வந்தது.
தமிழ்நாதம்
இம்மன்றம் தமிழ்நாதம் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தது. இச் சஞ்சிகை புலம் பெயர்ந்த பிராங்க்புர்ட் தமிழர்களின் எழுத்துக்களுக்கு களமாக அமைந்திருந்தது.
தமிழ் மன்றம்
தமிழ் மன்றம் பிராங்போர்ட், செருமனியில் 1988 இல் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர். இம்மலரை பிராங்போர்ட் தமிழ்மன்றம் ஆண்டறிக்கை மலராக வெளியிட்டுக் கொண்டிருந்தது.