பிரப்சோத் கவுர்
Jump to navigation
Jump to search
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பிரப்சோத் கவுர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பிரப்சோத் கவுர் |
---|---|
பிறந்ததிகதி | [1] | 6 சூலை 1924
இறப்பு | 24 நவம்பர் 2016 | (அகவை 92)
பணி | எழுத்தாளர், கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
பிரப்சோத் கவுர் (6 ஜூலை 1924 - 24 நவம்பர் 2016), இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாபி மொழி எழுத்தாளரும் கவிஞருமாவார்.
வரலாறு
பிரித்தானிய இந்தியாவின் குசராத்தில் பிறந்த பிரப்சோத் கவுர்[2] [3] [4] எழுத்தாளரும் நாவலாசிரியருமான நரேந்தர்பால் சிங் என்பவரை மணந்துள்ளார்.[4]
புது தில்லியில் உள்ள பாதுகாப்பு காலனியில் வசித்து வரும் இத்தம்பதிக்கு அனுபமா மற்றும் நிருபமா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சர்தார் ஹுகம் சிங் என்ற இந்திய மக்களவையின் மூன்றாவது சபாநாயகரை நிருபமா மணந்துள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங்கை அனுபமா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புத்தகங்கள் மற்றும் கவிதைகள்
- பீடபூமி
- கனவுகள் இளமையிலேயே இறக்கின்றன [5]
- பாபி: பஞ்சாபி கவிதா சங்கலனா
- ஜிந்தகி தே குஜா பாலா
- கினாகே
- மத்தியாந்தரா
- காந்தார யுகம் : கவிதாவாம்
- காரி
- காந்தாரி ஹவா
- போலனா தீ நஹிம் ஜா வே அரியா
விருதுகள்
- கவுர், 1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான "பப்பி"க்காக சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். இவரது கணவர் நரேந்தர்பால் சிங்கும் 1976 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பத்மசிறீ விருது, [6] 1967.
- "பிரான்சின் ரோசா" விருது, 1968
- அமெரிக்காவின் கவிதை இயக்கம் இவரை சிறப்புமிக்க கவிதையால் பெருமைப்படுத்தியுள்ளது.
- பஞ்சாபின் மாநிலச் சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- யுனெஸ்கோவின் உறுப்பினர்
இறப்பு
24 கவிதைத் தொகுப்புகளையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள பிரப்சோத் அவரது 92 ஆம் அகவையில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலமானார்.[7]
மேற்கோள்கள்
- ↑ R. P. Malhotra; Kuldeep Arora (2003). Encyclopaedic Dictionary of Punjabi Literature: A-L. Global Vision Publishing House. பக். 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87746-52-2. https://books.google.com/books?id=WLAwnSA2uwQC&pg=PA294.
- ↑ "KAUR, PRABHJOT (1924 - ) - Famous Sikh personalities". 2016-09-17 இம் மூலத்தில் இருந்து 2016-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160917192213/https://www.thesikhencyclopedia.com/biographies/famous-sikh-personalities/kaur-prabhjot-1924.
- ↑ "Prabhjot Kaur worldcat.". http://www.worldcat.org/identities/lccn-n88648809/.
- ↑ 4.0 4.1 "Punjabi poet Prabhjot Kaur passes away". tribuneindia.com. http://www.tribuneindia.com/news/nation/punjabi-poet-prabhjot-kaur-passes-away/328108.html.
- ↑ Dreams die young. இணையக் கணினி நூலக மையம்:7548887. https://www.worldcat.org/oclc/7548887. பார்த்த நாள்: 7 July 2016.
- ↑ "Year wise list of Padma Shri recipients - 1954 to 2014.". pp. Page 27 of 193 No. 42 இம் மூலத்தில் இருந்து 15 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115022326/http://mha.nic.in/sites/upload_files/mha/files/YearWiseListOfRecipientsBharatRatnaPadmaAwards-1954-2014.pdf.
- ↑ "பஞ்சாபி கவிஞர் பிரப்சோத் கவுர் காலமானார்". https://www.tribuneindia.com/news/archive/features/punjabi-poet-prabhjot-kaur-passes-away-328108.