பிரச்னை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிரச்னை (பின்னர் உதயம் என பெயர் மாற்றப்பட்டது) என்பது 1970 களில் வெளியான முற்போக்கு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்தது.

வரலாறு

சாதாரணத் தொழிலாளிகள் சில பேர் சேர்ந்து வெகு மக்களை எட்டக் கூடிய வகையில் தொழிலாளர்களும் விவசாயிகளும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் முற்போக்கு மாதமிருமுறை இதழ் ஒன்றை துவக்கி நடதினார்கள். முதலில் இதற்கு 'பிரச்னை' என்று பெயரிடப்பட்டது. இதழின் ஆசிரியர்களாக ஆர். சாம்பசிவம், எஸ். இசக்கிமுத்து என்று அறிவிக்கப்பட்டது. சில இதழ்களுக்குப் பிறகு தெ. சண்முகம் ஆசிரியர் என்றும், முந்திய இருவரும் இணை ஆசிரியர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் இதழ் 1972 அக்டோபரில் வெளிவந்தது. 10வது இதழ் முதல் இதழின் பெயர் மாற்றம் பெற்றது. பிரச்னை 'உதயம்' ஆயிற்று.

கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்த ஏடு வெளியிட்டது. சமூகப் பிரச்னைகள், அரசியல் விடயங்கள், கலை மற்றும் இலக்கிய விடயங்கள் பற்றி எளிய நடையில் விளக்கமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை எடுத்துக்கூறியது. அஸ்வகோஷ் (ஏ. ஜி.) கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அதிகம் எழுதினார். மாவேலி ஜாப்சன், ஆத்மாநாம், அக்கிணிபுத்திரன் முதலிய பலரும் இதில் கவிதைகள் எழுதியுள்ளனர்.[1]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரச்னை_(இதழ்)&oldid=17681" இருந்து மீள்விக்கப்பட்டது