பிரசாந்த் அய்யங்கார்
பிரசாந்த் அய்யங்கார் | |
---|---|
பிறப்பு | 12 சனவரி 1973 இந்தியா |
பிறப்பிடம் | கருநாடகம், இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கர்நாடக இசைக்கலைஞர், வீணை இசைக்கலைஞர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
இணையதளம் | www |
பிரசாந்த் ஐயங்கார் (Prashanth Iyengar) ( பிறப்பு: சனவரி 12, 1973) இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரியக் கருநாடக இசைக்கலைஞரும், வீணை இசைக்கலைஞருமாவார். மேலும் இவர், ஒரு கலைஞராகவும், இசையமைப்பாளரும், ஆசிரியருமாவார். அனைத்து '72 மேளகர்த்தா இராகங்களிலும் வர்ணங்களை இயற்றிய கர்நாடகாவின் முதல் இசையமைப்பாளராவார். [1] 2011 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கப்பட்டணத்தின் கோவிலில் 24 மணி நேரம் தனது மராத்தான் வீணை இசை நிகழ்ச்சிக்காக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். [2]
சொந்த வாழ்க்கை
பிரசாந்தின் தாய் வித்வான் பத்மாசினி நரசிம்மாச்சார் இவருடைய முதல் வீணை குருவாக இருந்தார். [3] ஏழு வயதிலேயே, "எந்தரோ மகானுபாவாலு" போன்ற கீர்த்தனைகளை இவர் வாசித்தர். [1] பின்னர் வித்வான் ஆர்.கே.சூர்யநாராயணன் என்பவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.[1] இவர், மருந்தகத்தில் இளங்கலை பட்டமும், கணினிப் பொறியியலில் சான்றிதழ் பட்டமும் பெற்றவர்.
தொழில்
கர்நாடக அரசின் பாடப்புத்தகங்கள் இயக்குநரகத்தில் இசைத் துறையின் பொறுப்பாளராக சில காலம் பணியாற்றி வந்த இவர், முழுநேர இசைக்கலைஞராக மாறினார். [4]
சாதனை
2011ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கப்பட்டணதிலுள்ள கோவிலில் 24 மணி நேரம் நீடித்த மராத்தான் வீணை இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இவர் லிம்கா தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.[2] .[5] இந்நிகழ்ச்சியில் இவருடன் இரவிசங்கர் சர்மா ( மிருதங்கம் ), கே. எஸ். கிருஷ்ணபிரசாத் ( கடம் ), டி. வி.பிரசன்ன குமார் ( கஞ்சிரா, மோர்சிங் ) [6] ஆகியோரும் உடன் இருந்தனர்.
பணிகள்
இவர், 90 வர்ணங்களை இயற்றியுள்ளார், அதில் 72 மேளகர்த்தா இராகங்களில் அடங்கும்.[1] அனைத்து 72 மேளகர்த்தா இராகங்களிலும் வர்ணங்களை இயற்றிய கர்நாடகாவின் முதல் இசையமைப்பாளராகவும், பாலமுரளிகிருஷ்ணாவுக்குப் பிறகு இரண்டாவது இளையவராகவும் அறியப்படுகிறார். [4] இவர், மேலும் 20 கிருதிகள், 10 தேவரநாமங்கள் மற்றும் ஐந்து தில்லானாக்களையும் இயற்றியுள்ளார். [1] மாணவர்களுக்கு வீணையைக் கற்பிப்பதற்காக ஸ்ரீ இராமா நிகழ்த்து கலை மையம் என்ற ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். [2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Govind, Ranjani (17 April 2014). "The food of life". The Hindu.
- ↑ 2.0 2.1 2.2 R, Anusha (20 April 2010). "24-hour veena marathon to enter Limca Records".
- ↑ "Thyagaraja Festival from Today". The New Indian Express. Kochi. 18 February 2014 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304104453/http://www.newindianexpress.com/cities/kochi/Thyagaraja-Festival-from-Today/2014/02/18/article2062554.ece. பார்த்த நாள்: 23 March 2015.
- ↑ 4.0 4.1 "Madokaram Prashanth Iyengar" இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150408160252/http://theveena.com/guru.html.
- ↑ "Marathon veena concert on April 21". Deccan Herald (Bangalore). 13 April 2010. http://www.deccanherald.com/content/63715/content/217419/F. பார்த்த நாள்: 23 March 2015.
- ↑ "Marathon veena concert on April 21". Deccan Herald (Bangalore). 13 April 2010. http://www.deccanherald.com/content/63715/content/217419/F. பார்த்த நாள்: 23 March 2015.