பியாண்ட் தி கிளவுட்ஸ் (2017 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பியாண்ட் தி கிளவுட்ஸ்
Beyond The Clouds
இயக்கம்மசித் மசிதி
தயாரிப்பு
  • ஷரீன் மந்த்ரி கடியா
  • கிஷோர் அசோரா
திரைக்கதை
  • மெஹ்ரான் கஷானி
  • மஜித் மஜிடி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
  • இஷான் காதிர்
  • மாளவிகா மோகனன்
ஒளிப்பதிவுஅனில் மேத்தா
படத்தொகுப்புஹாசன் ஹஸன்டோஸ்ட்
கலையகம்
  • ஜீ ஸ்டுடியோஸ்
  • நமா பிக்சர்ஸ்
விநியோகம்ஜீ ஸ்டுடியோஸ்
வெளியீடுநவம்பர் 20, 2017 (2017-11-20)(IFFI)
ஏப்ரல் 20, 2018 (India)
ஓட்டம்120 minutes[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

பியாண்ட் தி கிளவுட்ஸ் (Beyond the Clouds) என்பது 2018 ஆண்டைய இந்திய நாடகத் திரைப்படம். இதை எழுதி, இயக்கியவர் மசித் மசிதி ஆவார். படமானது ஜீ ஸ்டுடியோஸ்  பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது. படத்தில் நட்சத்திரமாக இஷான் காதிர் என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர்  மும்பை நகரில் போதை மருந்து விற்கும் ஆமிர் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆமிரின் சகோதரியான தாரா என்னும் பாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தாரா ஒரு கண்டிப்பான வணிகரிடம் (கௌதம் கோஸ்) பணிபுரிகிறார். இந்தத் திரைப்படத்தின் கதையானது உடன்பிறப்புகளுக்கு இடையே உள்ள பிணைப்பை மையமாகக் கொண்டதாக உள்ளது.

இப்படத்தின் தயாரிப்புத் திட்டப் பணிகள் 2016 ஆகத்தில் துவங்கியது. படத்தின் முதன்மைப் படப்பிடிப்புப் பணிகள்  2017 சனவரி மாதம் முதல் மும்பை நகரில் தொடங்கி, செய்பூருக்கு அருகில் உள்ள சம்பாரில் தொடர்ந்து, 2017 மே 6 அன்று மும்பையில் முடிவடைந்தது. வணிக வெளியீட்டுக்கு முன்பு, திரைப்படமானது 2017 அக்டோபர் முதல் 2018 பெப்ரவரிவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் இது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 2017 நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது. பியாண்ட் தி க்ளவுட்ஸ் படமானது மஷித் மஜிதி இயக்கிய முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட் திரைப்படத்துக்கு அடுத்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி சேர்ந்த இரண்டாவது படம் ஆகும்.

2018 ஏப்ரல் 20 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படமானது முன்னணி பாத்திரங்களை ஏற்றவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவுக்காக பாராட்டப்பட்டது, ஆனால் இயக்கம் மற்றும் யூகிக்கக்கூடிய கதையோட்டத்திற்காக படம் விமர்சிக்கப்பட்டது.

நடிகர்கள்

  • இஷான் காதிர் - ஆமிர் 
  • மாளவிகா மோகனன் - தாரா 
  • கௌதம் கோஸ் - அக்‌ஷி 
  • ஜி. வி. சாரதா -  ஜும்பா
  • தன்னிஸ்த சட்டர்ஜி
  • தவாணி ராஜேஷ்
  • மியா மால்கர்
  • ஹெபே ஷா[2]

கதை

தாராவும் ஆமிரும் உடன்பிறப்பான அக்காள் தம்பி ஆவார் இவர்களின் பெற்றோர், மகிழுந்து விபத்து ஒன்றில் மரணமடைய, அவர்கள் ஆதரவற்றவர்களாகிறார்கள். தாராவுக்குத் திருமணமாகிறது. அவளுடைய கணவன், குடிகாரன். தினமும் குடித்துவிட்டு, அக்காவையும் தம்பியையும் அடிப்பதுவே அவன் வாடிக்கை. ஒரு நாள், தாராவை விட்டு பிரியும் ஆமிர் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் கும்பல் ஒன்றிடம் வேலைக்குச் சேர்கிறான். அந்தக் கும்பல் தரும் பொட்டலங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதுதான் அவனுடைய வேலை.

இதற்கிடையில் தாரா கணவனை விட்டுப் பிரிந்து, வேலைக்குச் சேர்கிறாள். அவள் வேலை செய்யும் இடத்தில் அக்ஷி எனும் ஒருவன், அவளை வல்லுறவு செய்ய முயல்கிறான். அப்போது தாரா அவனைத் தாக்குவதால், அவன் மயக்கமடைந்து. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இதனால் தாரா, சிறைக்குச் செல்கிறாள். அக்ஷி உயிருடன் மீண்டு வந்தால் ஒழிய, அவள் விடுதலை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், அவளின் விடுதலைக்கு முயல்கிறான் ஆமிர். அவனால் அது முடிந்ததா என்பதுதான் மீதிப் படம்.

மேற்கோள்கள்

  1. "Film Review: 'Beyond the Clouds'". Variety.
  2. IANS (1 March 2017). "Heeba Shah to star in Majid Majidi's Beyond The Clouds". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/2017/mar/01/heeba-shah-to-star-in-majid-majidis-beyond-the-clouds-1576230.html. பார்த்த நாள்: 8 April 2018.