பித்தாமத்தர்
Jump to navigation
Jump to search
பித்தாமத்தர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். மையோடக் கோவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு [1] இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். இப் பாடலை இவர் பாலையாழ் பண்ணில் பாடிவந்தார். வையை ஆற்றில் அக் கால மக்கள் நீராடிய பாங்கு இப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
- இப்பாடலில் வரும் இசைக்கூட்டு வெண்பா
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல்
ஊருடன் ஆடுங்கடை.
(அடி 72 முதல் 76)
அடிக்குறிப்பு
- ↑ பரிபாடல் 7