பாலைநிலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாலைநிலை என்பது காஞ்சித்திணையில் வரும் துறைகளில் ஒன்று. கணவன் இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் மனைவி தானும் விழுந்து உயிர்விடத் துணிந்து கூறும் சொற்கள் பாலைநிலை என்னும் துறையாகும். [1]

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவன் இறந்தபோது தானும் அவனுடன் தீயீல் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளச் சென்றாள். சான்றோர் அவளைது தடுத்தனர். கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்புடன் தான் வாழ விரும்பவில்லை என்னும் பொருள் பொதிந்த பாடல் ஒன்றைப் பாடிவிட்டு, அவனை எரிக்கும் தீயில் தானும் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். [2]

இந்தப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இதனை ஆனந்தப் பையுள் எனக் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு

  1. நல்லோள் கணவனொடு நனி அழல் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலைநிலை - தொல்காப்பியம் புறத்திணையியல் 19
  2. புறநானூறு 246
"https://tamilar.wiki/index.php?title=பாலைநிலை&oldid=20132" இருந்து மீள்விக்கப்பட்டது