பார்வதி பூபாலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பார்வதி பூபாலன்
பார்வதி பூபாலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பார்வதி பூபாலன்
பிறந்ததிகதி பெப்ரவரி 4, 1944
பிறந்தஇடம் சிங்கப்பூர்
அறியப்படுவது எழுத்தாளர்

பார்வதி பூபாலன் (பிறப்பு: பெப்ரவரி 4, 1944) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், கல்விமானுமாவார். கல்வி, மொழி, இலக்கியம் தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகளில் பங்கேற்று கட்டுரைகள் படைத்துவருபவரும் இவர் கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றும் வருகின்றார்.

தொழில்

ஆரம்ப காலகட்டங்களில் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடநூல் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

பதவிகள்

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்.

இலக்கியப் பணி

1961ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், மாணவர்களுக்கான இலக்கிய மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரது படைப்புகள் பல நாடுகளிலிருந்தும் வெளிவரும் ஏடுகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.

எழுதியுள்ள நூல்

  • இளவேனில் பூக்கள் (கவிதைத் தொகுப்பு)

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • தமிழ்மணி புலவர் பட்டம்
  • இளங்கலைப் பட்டம்

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=பார்வதி_பூபாலன்&oldid=6026" இருந்து மீள்விக்கப்பட்டது