பார்காப்பான்
Jump to navigation
Jump to search
பார்காப்பான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளளது. அது குறுந்தொகை 254.[1]
பாடல் சொல்லும் செய்தி
கோங்கம்பூ பூத்துக் கிடக்கிறது. எனவே இது கார்காலம். அவர் வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற கார்காலம். இரவு பகலாக அவர் தூக்கமின்றிப் பொருளீட்டிக்கொண்டுள்ளார் என்னும் செய்தியோடு தூது வந்துள்ளது. அவர் வரவில்லை. பொறுத்துக்கொள் என்கிறாய். இன்னும் எத்தனை நாள் வொறுத்துக்கொள்ள முடியும்? முடிவில்லையே!
தலைவி இப்படித் தன் தோழியிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
மேற்கோள்
- ↑
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரார் தோழி!
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்
செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால் என, வரூஉம் தூதே.
பார்காப்பான் பாடல்