பாரதி பாஸ்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.[1][2]

படிப்பும் பணியும்

அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றார். சிட்டி வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

எழுத்துப் படைப்புகள்

கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார். சிறகை விரி, பற, அப்பா என்னும் வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாரதி_பாஸ்கர்&oldid=16489" இருந்து மீள்விக்கப்பட்டது