பாத்தேறல் இளமாறன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பாத்தேறல் இளமாறன் |
---|---|
பிறந்ததிகதி | சனவரி 2 1945 |
பிறந்தஇடம் | பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பாத்தேறல் இளமாறன் (பிறப்பு: சனவரி 2 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச்சாலையில் பிறந்த இவர் தனது 12வது வயதில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்துவந்தார். இவருக்கு கண்ணகி. தமிழ்க்கோதை. கலைச் செல்வி, மணிமாற செல்வன் எனும் அன்புச் செல்வங்களுளர்.
வகித்த பதவிகள்
இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பின்பு செயலாளராகவும், துணைத் தலைவராகவும், கொள்கை முழக்கம் எனும் திங்கள் இதழில் ஆசிரியராகவும், மற்றும் பல தனித் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார்.
இலக்கியப் பணி
சிறுவயதில் காடு காக்கப் போகும் போது பாட்டுப் புத்தகங்களை எடுத்துச் சென்று உரத்த குரலில் பாடும் பழக்கத்தை உடையவராக இவர் காணப்பட்டார். பின்பு சிங்கப்பூர் வந்து தமிழார்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் சமையல் உதவியாளராகச் சேர்ந்த இவருக்கு அதிகமான புத்தகங்களை வாசிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அங்கு உருவானது. அதைப் பயன்படுத்திக் கொண்டு யாப்பிலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் தமிழ் முரசு மாணவர்மணிமன்றத்தில் துணுக்குகள் எழுதிவந்த இவரின் முதல் கவிதை 1964ல் தமிழ் மலரில் வெளியானது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், பாடல்களையும், 10க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் பாடல்களை எழுதியுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
--220.255.2.135 22:34, 27 சனவரி 2014 (UTC)====கவிதைத் தொகுப்புகள்====
- காவடிப் பாடல்கள்
- திங்கள்
- பாத்தேறல்
- நினைக்க சுவைக்க
சிறுவர் பாடல்கள்
- மழலையர் பாடல்கள்
ஒலிநாடாக்கள்
- முருகன் பாடல்கள்
- மழலையர் பாடல்கள்
- பட்டுக்கோட்டை பாடல்கள்
- மாமாரி மாகாளி
பெற்ற விருதுகளும். கௌரவங்களும்
- பாத்தேறல் பட்டம் (1989)
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு