பாத்தூறல் முத்துமாணிக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாத்தூறல் முத்துமாணிக்கம்
பாத்தூறல் முத்துமாணிக்கம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பாத்தூறல் முத்துமாணிக்கம்
பிறந்ததிகதி செப்டம்பர் 19 1928
பிறந்தஇடம் நெய்வேலி
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ் நாடு
அறியப்படுவது எழுத்தாளர்

பாத்தூறல் முத்துமாணிக்கம் (பிறப்பு: செப்டம்பர் 19 1928) தமிழ் நாடு, புதுக்கோட்டை மாவட்டம் நெய்வேலி எனும் கிராமத்தில் பிறந்து அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு பணியாற்றி ஓய்வுபெற்றார்.

வகித்த பதவிகள்

தமிழர் இயக்கம், தமிழர் சங்கம் போன்றவற்றின் செயலாளராகவும், சிங்கப்பூர் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும், இந்து சபை, தமிழர் சீர்த்திருத்தச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிங்கப்பூர் சிராங்கூன்சாலையிலுள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் ஸ்ரீஇராம பஜனை அமைப்போடு சேர்ந்து பக்திப் பாடல்களைப் பாடிவந்தார்.

இலக்கியப் பணி

முத்துமாணிக்கம் எனும் புனைப்பெயரில் 1970 ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவித்துறையிலேயே கூடிய ஆர்வம் காட்டினார். இவரது முதல் கவிதை ஒரு கோயில் குடமுழுக்கு விழா மலருக்காக எழுதப்பட்ட பக்திக் கவிதையாகும். 1000 க்கும் அதிகமான கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

  • பொன்வண்டு
  • தேன்சிட்டு
  • சிங்கப்பூர் தெய்வங்களின் பக்திப் பாடல்கள்
  • தேவத் தமிழிசை விருந்து
  • துருகையம்மாள் போற்றிப் பாடல்கள்
  • காவடிப் பாட்டு
  • முத்துமாணிக்கம் கவிதைகள்
  • இஸ்லாமியக் கவிதைகள்
  • ஏசு கிருஸ்து பாமாலை
  • இந்து சமயப் பாடல்கள்

இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • பாத்தூறல் பட்டம்

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு