பாதாள பைரவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாதாள பைரவி
இயக்கம்கதிரி வெங்கட ரெட்டி
தயாரிப்புபொம்மிரெட்டி நாகிரெட்டி
அலூரி சக்கரபாணி
கதைபிங்காலி நாகேந்திரராவ்
திரைக்கதைகே. வி. ரெட்டி, கமலாகர காமேசுவர ராவ் (தெலுங்கு)
தஞ்சை இராமையாதாஸ் (தமிழ்)
இசைகண்டசாலா
நடிப்புஎன். டி. ராமராவ்
எஸ். வி. ரங்கராவ்
கே. மாலதி
ஒளிப்பதிவுமார்க்கசு பார்ட்லி
படத்தொகுப்புசி. பி. ஜம்புலிங்கம்
எம். எஸ். மணி
கலையகம்விஜயா வாகினி ஸ்டூடியோசு
வெளியீடுமே 17, 1951 (1951-05-17)
ஓட்டம்195 நிமி.
மொழிதமிழ்
தெலுங்கு

பாதாள பைரவி (Pathala Bhairavi) 1951 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா ஆவார். இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் 15 மார்ச் 1951-யில் வெளியான இப்படம் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து, 200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்கு படம் என்ற சாதனையையும் செய்தது. தஞ்சை இராமையாதாசு தமிழ் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்[1]

நடிகர்கள்

  • என். டி. ராமராவ் - தோட்ட ராமுடு
  • எஸ். வி. ரங்கராவ் - நேபாள மந்திரவாதி
  • பத்மநாபம் - சடஜப்பா
  • ரெலங்கி
  • மாலதி - இந்துமதி
  • கிரிஜா - பாதாள பைரவி
  • கிருஷ்ண குமாரி - முதலையாக வரும் பெண்
  • சாவித்திரி - நாட்டியமாடும் பெண்[2]

கதைச்சுருக்கம் (தெலுங்கு)

உஜ்ஜைனியின் மஹாராணி தன் மகள் இந்துமதியை (இந்து) தன் தம்பி சூரசேனாவிற்கு திருமணம் செய்ய விரும்புகிறார். தம்பி சூரசேனாவோ மிகவும் பயந்த, நிலையற்ற மனநிலை கொண்டவன். அவ்வாறாக சூரசேனா பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், தோட்ட ராமுடு அவனை அடித்து விடுகிறான். அதனால், அரசருக்கு முன்னால் வரவழைக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்படுகிறது. ராமுடுவின் மரண தண்டனை நிறைவேற்ற ஒரு தினத்திற்கு முன்பு, அரசு காவலை மீறி மிக ரகசியமாக தப்பித்து இந்துமதியை சந்தித்து தன் காதலை வெளிப்படுத்துகிறான் ராமுடு. ஒரு தீய மந்திரவாதியிடம் இருந்து இந்துவை காப்பாற்ற ஒரு தைரியமான ஆண்மகனால் மட்டுமே முடியும் என்று ஜோசியர் கூறியது ராஜாவின் நினைவிற்கு வந்தது. அதனால், ராமுடு இந்துவை திருமணம் செய்ய உஜ்ஜைனி ராஜாவிடம் உள்ள சொத்து அளவிற்கு ராமுடு சம்பாதித்தால் அவளை மணக்கலாம் என்று ராஜா சவால் விடுகிறார். அதை ராமுடு ஒப்புக்கொள்ள, விடுதலை செய்யப்படுகிறான்.

தெருவில் மாயாஜாலம் செய்யும் ஒரு நேபாள மந்திரவாதியை ராமுடு சந்திக்கிறான். ஒரு தைரியமான புத்திசாலி ஆண் மகனை பலி கொடுத்தால் கேட்ட வரம் தரும் சிலையை தருவதாக பாதாள பைரவி வாக்கு தந்திருந்தாள். ராமுடுவை பலி கொடுக்க முடிவுசெய்கிறான் அந்த மந்திரவாதி. அந்த சமயம் புனித நீராடச் சென்ற ராமுடு, குளத்தில் முதலை ஒன்றை சண்டையிட்டு கொல்ல, சாபம் நீங்கி அது ஒரு பெண்ணாக மாறி மந்திரவாதியின் பலி திட்டத்தை ராமுடுவிற்கு சொல்லியது. அதை மனதில் வைத்துக்கொண்டு, பலிக்கு முன்னால், ராமுடு அந்த மந்திரவாதியை பலி கொடுத்து வரம் தரும் சிலையை பெற்று இந்துவை மணக்க வேண்டிய செல்வத்தையும் பெற்றுவிடுகிறான். அதனை அறிந்த ராஜா, தான் கொடுத்த வாக்குப்படி திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்.

மந்திரவாதியின் உதவியாள் சடஜப்பா சஞ்சீவனியின் உதவியால் தன் குரு மந்திரிவாதியை மீண்டும் உயிர் பெரும் படி செய்கிறான். உயிர் பெற்ற மந்திரவாதி, தற்கொலை செய்யப்போகும் சூரசேனனை அவன் அந்த சிலையை கொண்டுவந்து கொடுத்தால் இந்துவும் செல்வமும் கிடைக்கும் என்றுவாக்குத் தருகிறான். அதனை ஒப்புக்கொண்டு தந்திரம் செய்து அந்த சிலையை திருடிவந்து மந்திரவாதியிடம் சூரசேனன் கொடுத்ததால் ராமுடுவின் செல்வம் அனைத்தும் மறைந்துபோயின. செல்வத்தை மீட்டுவருவதாக சபதம் செய்து, அஞ்சியுடன் மந்திரவாதியின் குகையை தேடித் செல்கிறான் ராமுடு.

அவர்கள் குகையை தேட சென்றிருக்க, மந்திரவாதி தன்னை திருமணம் செய்ய இந்துவை வற்புறுத்துகிறான். ஒப்புக்கொள்ளாதால், சிலையின் உதவியுடன் ராமுடுவை குகைக்கு வரவழைத்து இந்துவிற்கு முன்னால் துன்புறுத்தப்படுகிறான் ராமுடு. சடஜப்பா போல் வேடம் பூண்ட அஞ்சி, மந்திரவாதி தன் தாடியை சவரம் செய்தால் இந்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள் என்றான். தாடியை எடுக்க, அனைத்து சக்தியையும் இழந்தான் மந்திரவாதி. சிலை யாருக்கு கிடைத்தது? இந்துவை யார் திருமணம் செய்தார்? என்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதி கதையாகும்.

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா ஆவார். பிங்களி நாகேந்திரராவ் இப்படத்தின் தெலுங்குப் பாடல்களை எழுதினார்[3].

தெலுங்குப் பாடல்கள் பட்டியல்[4]
வரிசை

எண்

பாடல்
1 தீயானி ஊஹளு
2 இதிஹாசம் விண்ணாரா
3 கலவரமாயே
4 எந்த்த காட்டு ப்ரேமையோ
5 வினவே பாலா நா பிரேமா கோலா
6 வகலுய வாகலு
7 பிரேமா கோசமாய் வளளோ பட்டேனே
8 ஹாயிகா
9 கணுக்கோண கலனோ
10 ரணத்தே ரன்னேறவோயி

வெளியீடு

15 மார்ச் 1951 அன்று தெலுங்கிலும், 17 மே 1951 அன்று தமிழிலும் இப்படம் வெளிவந்தது[5].175 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தெலுங்கு திரைப்படம் இதுவாகும்[6]. 200 நாட்கள் ஓடியதும் இப்படம்தான்[7]. பாதாள பைரவி விமர்சகர்களால் நன்கு பாராட்டப்பட்டப் படமாகும்.[8]

மேற்கோள்கள்

  1. Dhananjayan 2011, ப. 118.
  2. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024. 
  3. "p. 118". https://en.wikipedia.org/wiki/Pathala_Bhairavi#CITEREFDhananjayan2011. 
  4. "Saregama" இம் மூலத்தில் இருந்து 2015-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150528125431/https://www.youtube.com/playlist?list=PLD8J0-dKvBie51aLvduG2mmhFqssUipLV. 
  5. "p. 210". https://en.wikipedia.org/wiki/Pathala_Bhairavi#CITEREFPillai2015. 
  6. "தி டைம்ஸ் ஆப் இந்தியா" இம் மூலத்தில் இருந்து 2015-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150528063412/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/A-few-milestones-in-Tollywood/articleshow/22582171.cms. 
  7. "தி டைம்ஸ் ஆப் இந்தியா" இம் மூலத்தில் இருந்து 2015-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150528064310/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Balakrishnas-film-Legend-sets-a-new-TFI-record/articleshow/47250360.cms. 
  8. "p. 119". https://en.wikipedia.org/wiki/Pathala_Bhairavi#CITEREFDhananjayan2011. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாதாள_பைரவி&oldid=35442" இருந்து மீள்விக்கப்பட்டது