பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி
Jump to navigation
Jump to search
பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி சங்க காலச் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் கானப்பேரெயில் போரில் வெற்றி கொண்டு அந்த நாட்டை தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.
சங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி. ஒருவேளை பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருத்தல் கூடும்.
புலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். [1]
அடிக்குறிப்பு
- ↑ புறநானூறு 367