பாண்டியன் அதிவேக விரைவு வண்டி
Jump to navigation
Jump to search
பாண்டியன் அதிவேக விரைவுத் தொடருந்து | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | அதிவேக விரைவு | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
முதல் சேவை | Wed Oct 01, 1969 | ||
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவேக விரைவு | ||
வழி | |||
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) | ||
இடைநிறுத்தங்கள் | 8 | ||
முடிவு | மதுரை சந்திப்பு (MDU) | ||
ஓடும் தூரம் | 493 km (306 mi) | ||
சராசரி பயண நேரம் | 7 மணி 45 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 12637/12638 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | முதல் வகுப்பு 1 A/C (H), இரண்டாம் வகுப்பு 2 A/C (A), மூன்றாம் வகுப்பு 3 A/C (B), படுக்கைப் வகுப்பு (SL), முன்பதிவற்ற வகுப்பு (GS) மற்றும் ஜெனரேட்டர் பெட்டி (EOG) | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | |||
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) | ||
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வகுப்பு பெட்டிகள்) | ||
உணவு வசதிகள் | On-Boarding Catering , e-Catering | ||
காணும் வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | RPM/WAP-7 | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
மின்சாரமயமாக்கல் | 25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை) | ||
வேகம் | 71 km/h (44 mph) மணிக்கு 130km/h | ||
|
பாண்டியன் அதிவேக விரைவுத் தொடருந்து, இந்திய இரயில்வேயின் ஒரு மண்டலமான தெற்கு இரயில்வேயால் மதுரை சந்திப்பு மற்றும் சென்னை எழும்பூர் இடையே திருச்சிராப்பள்ளி சந்திப்பு வழியாக இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவு வண்டி ஆகும் (மறுதலையாகவும்).
அறிமுகம்
- மதுரையை ஆண்ட மாமன்னர் பாண்டியர் பெயரால் இத்தொடருந்து அழைக்கப்படுகிறது.
- இந்த இரயில் சென்னை எழும்பூர் முதல் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்திப்பு வழியாக மதுரை சந்திப்பு வரை முதலிய நகரங்கள் வழியே 493 கி.மீ. பயணிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் 120 கி.மீ/மணி. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது ராக்போர்ட் (மலைக்கோட்டை) அதிவிரைவு வண்டி மற்றும் சோழன் அதிவேக விரைவு வண்டிகளுடன் பெட்டிகளைப் பகிர்ந்து கொள்கிறது. இத் தொடருந்து மதுரை பணிமனையில் பராமரிக்கப்படுகிறது.
கால அட்டவணை
வண்டி எண் 12637 சென்னை எழும்பூரிலிருந்து 21.40 மணிக்குப் புறப்பட்டு மதுரை சந்திப்பை 05.25 மணிக்கு அடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 12638 மதுரை சந்திப்பிலிருந்து 21.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை 05.15 மணிக்கு அடைகிறது.
12637 ~ சென்னை எழும்பூர் → மதுரை சந்திப்பு பாண்டியன் அதிவேக விரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
நிலையம் | நிலைய குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | - | 21:40 | |
தாம்பரம் | TBM | 22:08 | 22:10 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 22:38 | 22:40 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 00:05 | 00:10 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 00:50 | 00:52 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 02:45 | 02:50 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 03:52 | 03:55 | |
அம்பாத்துரை | ABI | 04:06 | 04:07 | |
கொடைக்கானல் ரோடு | KQN | 04:16 | 04:17 | |
மதுரை சந்திப்பு | SCT | 05:25 | ||
12662 ~ மதுரை சந்திப்பு → சென்னை எழும்பூர் பாண்டியன் அதிவேக விரைவு வண்டி | ||||
மதுரை சந்திப்பு | MDU | - | 21:35 | |
கொடைக்கானல் ரோடு | KQN | 21:58 | 22:00 | |
அம்பாத்துரை | ABI | 22:14 | 22:15 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 22:27 | 22:30 | |
மணப்பாறை | MPA | 23:09 | 23:10 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 23:35 | 23:40 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 01:20 | 01:22 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 02:28 | 02:30 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 03:48 | 03:50 | |
தாம்பரம் | TBM | 04:18 | 04:20 | |
மாம்பலம் | MBM | 04:38 | 04:40 | |
சென்னை எழும்பூர் | MS | 05:15 | - |
இரயில் பெட்டி அமைப்பு
இந்த வண்டியில் 22 பெட்டிகள் உள்ளன
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
படிமம்:BSicon LDER.svg | EOG | GS | GS | GS | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B6 | B5 | B4 | B3 | B2 | B1 | A3 | A2 | A1 | H1 | EOG |
வண்டியின் வேகம்
இது தென்னக இரயில்வேயின் அதிவேக வண்டிகளுள் ஒன்றாகும். 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படும் இதன் சராசரி வேகம் 71 கி.மீ/மணி மற்றும் அதிகபட்ச வேகம் 130 கி.மீ/மணி
உசாத்துணைகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.