பாண்டா தேநீர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாண்டா தேநீர் (Panda tea) அல்லது பாண்டா சாண தேநீர் என்பது சீனாவின் யான், சிச்சுவான் மலைகளில் பயிரிடப்பட்டும் ஒரு தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். இத்தேயிலைச் செடிகள் பாண்டாக்களின் சாணத்தினை உரமாக இடப்பட்டு வளர்க்கப்படுகிறது, இத்தேயிலை சந்தையில் ஏப்ரல் 2012இல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. அந்த நேரத்தில் உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் இதுவாக இருந்தது. 50 கிராம் (தோராயமாக 16 கோப்பைகள் தேநீர்) தேயிலை 3500 அமெரிக்க டாலருக்கும் 3,500 (2200 பவுண்டு) அல்லது ஒரு கப் தேநீர் சுமார் 200 அமெரிக்க டாலர் (130 பவுண்டு)க்கு விற்கப்பட்டது.[1][2] பாண்டா தேயிலை தொழில்முனைவோரான யான்ஷி, இந்த தேநீர் ஆரோக்கியமானது என்று வாதிடுகிறார். பாண்டாக்கள் காட்டு மூங்கிலை மட்டுமே சாப்பிடுகின்றன. இதில் சுமார் 30% ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உறிஞ்சப்படுகிறது.[3] இதனால் "கரிம உரங்களை மறுசுழற்சி மற்றும் பயன்படுத்துவதற்கான கலாச்சாரத்தை" இம்முறை ஊக்குவிக்கிறது. விலையில் மிகப்பெரிய உயர்வு பெரும்பாலும் பாண்டாக்களின் இழப்பு காரணமாகும்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

 

"https://tamilar.wiki/index.php?title=பாண்டா_தேநீர்&oldid=29053" இருந்து மீள்விக்கப்பட்டது