பவித்ரா லட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பவித்ரா லட்சுமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
பவித்ரா லட்சுமி
பிறந்ததிகதி 16 சூலை 1994 (1994-07-16) (அகவை 30)
பிறந்தஇடம் தமிழ்நாடு
பணி விளம்பரப்பெண், திரைப்பட நடிகை
செயற்பட்ட ஆண்டுகள் 2015ம் ஆண்டு முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 2015ம் ஆண்டு முதல்

பவித்ரா லட்சுமி, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகை ஆவார். ஓ காதல் கண்மணி (2015) என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, அவர் குக் வித் கோமாளி (2021) நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.மேலும் நாய் சேகர் (2022) மற்றும் உல்லாசம் (2022) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

1994 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி  பிறந்த பவித்ரா. முதன்முதலில் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி (2015) திரைப்படத்தில் கதாநாயகனான, துல்கர் சல்மானின் முக்கிய கதாபாத்திரத்தின் சக ஊழியராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் மிஸ் மெட்ராஸ் 2015 மற்றும் குயின் ஆஃப் இந்தியா 2016 ஆகிய போட்டிகளில் வென்று பட்டங்களையும் பெற்றுள்ளார்..[1][2] 2021 ஆம் ஆண்டில், பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு, அதன் மூலம் மிகவும் பிரபலமானார். அந்நிகழ்ச்சி இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது.[3][4]

2022 ம் ஆண்டில், பவித்ரா நான்கு படங்களில் நடித்துள்ளார். ஏ ஜி எஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் இவருக்கு மிகப்பெரிய வெளியீடாக இருந்துள்ளது. நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு நாயகியாக நடித்ததற்கு நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டையும் பெற்றுள்ளார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் திரைப்பட விமர்சனத்தில், "பவித்ராவின் கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு காட்சியமைப்புகள் இல்லாவிட்டாலும், கிடைத்த சில சந்தர்ப்பங்களிலும் அதற்கு தேவையான நியாயத்தைச் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது.[5][6] மலையாள நடிகர் ஷேன் நிகாமுக்கு நாயகியாக உல்லாசம் என்ற மலையாளத் திரைப்படத்திலும், தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் எடுக்கப்பட்ட திரைப்படமான யுகியிலும் பல்வேறு பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்,.[7]

திரைப்படவியல்

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள்
2015 ஓ காதல் கண்மணி ஆதித்யாவின் உடன் பணிபுரிபவர் தமிழ் அங்கீகரிக்கப்படாத பாத்திரம்
2021 R23 கிரிமினல் டைரி தமிழ்
2022 நாய் சேகர் பூஜா நீலகண்டன் தமிழ்
உல்லாசம் நிமா மலையாளம்
அத்ரிஷ்யம் பவித்ரா மலையாளம் இருமொழி படம்
யுகி தமிழ்
தொலைக்காட்சி தொடர்
ஆண்டு தலைப்பு பங்கு நடைமேடை மொழி குறிப்புகள்
2020 டைம் என்ன பாஸ்! ? சந்தியா அமேசான் பிரைம் தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஆண்டு தலைப்பு நடைமேடை மொழி குறிப்புகள்
2021 குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி தமிழ் 4வது ரன்னர்-அப்

மேற்கோள்கள்

  1. "Pavithra Lakshmi: Shane referred me to be his film's heroine - Times of India". The Times of India.
  2. "Pavithra Lakshmi's cute message to her mother - Times of India". The Times of India.
  3. "Samantha akkinenis lookalike pavithra lakshmi will shock you with her striking resemblance view pics 1815536". www.bollywoodlife.com.
  4. "Here's why Pavithra Lakshmi is missing from 'Cooku with Comalis 2'; see post - Times of India". The Times of India.
  5. "Naai Sekar Review: This painfully unfunny film leaves you dog-tired". சினிமா எக்ஸ்பிரஸ்.
  6. "Sathish & Pavithra Lakshmi's Naai Sekar teaser - Times of India". The Times of India.
  7. Praveen, S. R. (1 July 2022). "'Ullasam' movie review: Shane Nigam, Pavithra Lakshmi star in dull, meandering rom-com" – via www.thehindu.com.
"https://tamilar.wiki/index.php?title=பவித்ரா_லட்சுமி&oldid=23031" இருந்து மீள்விக்கப்பட்டது