பவா செல்லத்துரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை
இயற்பெயர்/
அறியும் பெயர்
பவா செல்லத்துரை
அறியப்படுவது எழுத்தாளர்
பதிப்பாசிரியர்

பவா செல்லத்துரை (Bava Chelladurai) என்பவர் ஒரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியரும் ஆவார்.[1] இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர்.

இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்துகிறார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழின் ஏழாவது பருவத்தில் கலந்து கொண்டு இரண்டாவது வாரத்தின் 8 வது நாளில் உடல் நிலை காரணமாக வெளியேறினார்.

குடும்பம்

இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. அங்கு கே. வி.ஷைலஜா என்ற பெண்ணைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.‌ [2] கே. வி. ஷைலஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக உள்ளார். இவரது மனைவியின் அக்கா கே. வி. ஜெயஸ்ரீ, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புகான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

படைப்புகள்

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை

ஜனவரி 2008 இல் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதனை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. [3]

நீர் மற்றும் கோழி

நீர் மற்றும் கோழி என்பது வம்சி பதிப்பகம் வெளியிட்ட நூலாகும். இதில் பவா செல்லத்துரையின் கரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

19 டி. எம். சாரோனிலிருந்து

  1. எல்லா நாளும் கார்த்திகை
  2. பங்குக்கறியும் பின்னிரவுகளும்

மொழிபெயர்ப்புகள்

மலையாள எழுத்தாளர் பால் சாக்கரியாவின் கதை தேன் என்ற பெயரில் சிறு நூலாக வெளியிடப்பட்டது. இதனை பவா செல்லத்துரை மொழிபெயர்த்துள்ளார். வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைத்துரையில் நடிகராக

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2016 ஜோக்கர்
2019 பேரன்பு சித்தா
குடிமகன்
2020 சைக்கோ அக்பர்
வால்டர் ஈஸ்வர மூர்த்தி

ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்பட்டத்தில் நடித்துள்ளார். [4] இத்திரைப்படம் 2016 இல் வெளிவந்தது.

மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைபடத்தில் (2020) நடித்துள்ளார்.

நூல்கள்

நாவல்

  • உறவுகள் பேசுகிறது -1986

கவிதை

  • எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
படிமம்:Natchathirangal-olindhu-kollum-karuvarai-copy 1-1.jpg
நன்றி வம்சிபுக்ஸ்.காம்

சிறுகதைத் தொகுப்பு

  • நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - 2008
  • டொமினிக் -2016
  • நீர் மற்றும் கோழி - 2017

கட்டுரைகள்

  • 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
  • எல்லா நாளும் கார்த்திகை – 2013
  • நிலம் – 2014
  • பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல - 2016
  • பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
  • மேய்ப்பர்கள்- 2020
  • இலக்கில்லா பயணங்கள்-2021

மொழிபெயர்த்த நூல்கள்

  • மலையாளத்திலிருந்து பால் சக்கரியா எழுதிய "தேன்"என்ற நூலை தமிழில் 2018-ல் மொழிபெயர்த்தார்.

தொகுத்த புத்தகங்கள்

  • கந்தர்வன் கதைகள் – 2012
  • ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்-1992
  • சிறகிசைத்த காலம் – 2013
  • நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயந்தனின் சிறுகதைகளடங்கிய தொகுப்பு )-2005

பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்

மலையாளம்

சிறுகதை தொகுப்பு

  • நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந கற்ப பாத்ரம் - திரு.ஸ்டான்லி
  • டொமினிக் - கே.எஸ். வெங்கடாசலம்

கட்டுரை

  • எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் டாக்டர் டி.என். ரகுராம்
  • வழிகாட்டி (மேய்ப்பர்கள்)- ஷஃபி செருமா விளவில்-2022
  • கிழக்கு நோக்கி சிரிச்ச பூ- அனுபவங்களும், கட்டுரைகளும்- கே.எஸ். வெங்கடாசலம்

ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள்

  • Dominic - சித்ராஜ் பொன்ராஜ்
  • Ruins of the Night - ஜானகி வெங்கட்ராமன்
  • From 19 DM Saron - பி. ராம்கோபால்
  • Shepherd - டாக்டர் கே. சுப்ரமணியன்
  • Shared Meat and Late Nights –2021 டாக்டர். லக்ஷ்மிபிரியா
  • Earth- டாக்டர். லக்ஷ்மிபிரியா
  • Carnival Called Life- லதா ராமகிருஷ்ணன்

தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு

  • நக்‌ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் ( நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை கதைகளின் முழுத் தொகுப்பு) - ஜில்லாலே பாலாஜி

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. "ஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்". www.jeyamohan.in.
  2. http://andhimazhai.com/news/view/does-not-arise-.html
  3. பிரபஞ்சன். "பச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை". keetru.com.
  4. http://www.tamilcinetalk.com/tag/நடிகர்-பவா-செல்லத்துரை/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பவா_செல்லத்துரை&oldid=4994" இருந்து மீள்விக்கப்பட்டது