பவானி வீரையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு புவான்
பவானி வீரையா
YB Bavani Veraiah
பேராக் மாநில சட்டமன்றம்
Bavani Veeraih.png
மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 டிசம்பர் 2022 முதல்
அரசர் நசுரின் சா
முன்னவர் லியோங் சியோக் கெங்
DAP-Logo.png ஜனநாயக செயல் கட்சி
தொகுதி மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி
பெரும்பான்மை 10,905 (2022)
வாக்காளர்கள்: 18,618
பேராக் மாநில பாக்காத்தான்
நிர்வாகச் செயலாளர்
பதவியில்
2012 – 2022
Pakatan Harapan Logo.svg.png பாக்காத்தான் அரப்பான் நிர்வாகம்
தனிநபர் தகவல்
பிறப்பு பவானி வீரையா
(Bavani Veraiah)

1974
பத்து காஜா, பேராக், மலேசியா
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி DAP-Logo.png ஜசெக
Pakatan Harapan Logo.svg.png பாக்காத்தான் அரப்பான் (PH)
(2008 முதல்)
வாழ்க்கை துணைவர்(கள்) ?
இருப்பிடம் மாலிம் நாவார், பேராக்
படித்த கல்வி நிறுவனங்கள் மனிதவள நிர்வாகத் துறை
இளங்கலை பட்டதாரி
பணி அரசியல்வாதி

பவானி வீரையா எனும் பவானி வீரையா சாசா (ஆங்கிலம்: Bavani Veraiah (Shasha); சீனம்: 布瓦尼·维拉·莎莎) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி; மனித உரிமை செயற்பாட்டாளர்; மற்றும் பேராக் மாநில சட்டமன்றத்தின் மாலிம் நாவார் தொகுதி உறுப்பினரும் ஆவார்.[1][2]

சீனர்கள் அதிகமாக வசிக்கும் மாலிம் நாவார் தொகுதி ஜனநாயக செயல் கட்சியின் பாரம்பரியக் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. மாலிம் நாவார் தொகுதியின் வாக்காளர்களில் 66 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சீனச் சமூகத்தினர் ஆவர். அத்துடன் 90 விழுக்காட்டு சீனர், மலாய் இனத்தவர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் ஒரு தமிழ்ப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சாதனையாக அறியப்படுகிறது.

2022-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 18,618 வாக்காளர்களைக் கொண்ட மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில், 10,905 வாக்குகள் பெரும்பான்மையில் பவானி வீரையா வெற்றி பெற்றார். இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) உறுப்பினர் ஆவார்.[3]

பொது

தற்போது ஜனநாயக செயல் கட்சியின் உயர்மட்ட இந்தியப் பெண்களில் நிறைவான அரசியல் அனுபவம் கொண்டவர்களில் சாசா எனப்படும் பவானி வீரையாவும் ஒருவர் ஆவார். இவரை ஜனநாயக செயல் கட்சியின் எல்லா நிலைகளிலும் உள்ள தலைவர்களும் உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேல் ஜனநாயக செயல் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள பவானி, மனிதவள நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[4]

2008-ஆம் ஆண்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு வரையில் பேராக், துரோனோ சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி. சிவகுமார் அவர்களின் அரசியல் உதவியாளராகப் பவானி வீரையா பணியாற்றி உள்ளார். அதே காலக் கட்டத்தில் பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]

சேவைகள்

பத்து காஜா மக்களவைத் தொகுதியில் பல நிலைகளில் பல்லாண்டு காலமாகச் சேவை செய்துள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளாக, பேராக் மாநில பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நிர்வாகச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.

2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; ஆகிய இரு தேர்தல்களின் போது சரவாக், தெலுக் இந்தான், கோலாகங்சார், கேமரன் மலை ஆகிய பகுதிகளில் இவர் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார். இவரின் செயல்திறனைக் கவனித்த ஜனநாயக செயல் கட்சியின் தலைமைத்துவம்; 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவரை மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் களமிறக்கியது.[5]

மாலிம் நாவார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்




Circle frame.svg.png

2022-இல் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (24.01%)
  சீனர் (65.55%)
  இதர இனத்தவர் (0.70%)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் பவானி வீரையா
(V Bavani @ Shasha)
10,905 58.57% - 9.03 % Red Arrow Down.svg.png
பாரிசான் நேசனல் சின் ஊன் கியோங்
(Chin Woon Kheong)
3,646 19.58% - 11.54% Red Arrow Down.svg.png
பெரிக்காத்தான் நேசனல் செரி சையத்
(Sherry Syed)
3,383 18.17% + 18.17% Green Arrow Up Darker.svg.png
சபா பாரம்பரிய கட்சி லியோங் சியோக் கெங்
(Leong Cheok Keng)
684 3.67% + 3.67% Green Arrow Up Darker.svg.png
செல்லுபடி வாக்குகள் (Valid) 18,618 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 208
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 59
வாக்களித்தவர்கள் (Turnout) 18,885 63.58% - 12.38% Red Arrow Down.svg.png
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 29,701
பெரும்பான்மை (Majority) 7,259 38.99% + 2.51% Green Arrow Up Darker.svg.png
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8]

மேற்கோள்கள்

  1. "Perak representatives". DAP Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  2. "Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15". PRU @ Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  3. "Profile Perak". mypov.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  4. 4.0 4.1 "வேட்பாளர் அறிமுகம்: பவானி வீரையா". Malaysiakini. 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  5. "Malim Nawar candidate Bhawani's chances of victory are bright". Thinathanthi News. 5 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  8. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Malim Nawar N41". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பவானி_வீரையா&oldid=17992" இருந்து மீள்விக்கப்பட்டது