பவர் ஆப் உமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பவர் ஆப் உமன்
இயக்கம்ஜெயதேவி
தயாரிப்புஜெயதேவி
இசைவித்தியாசாகர்
நடிப்புகுஷ்பூ
ஹரிஹரன்
ரியாஸ் கான்
ஒளிப்பதிவுகிச்சாஸ்
கலையகம்ஜெயதேவி பிலிம்ஸ்[1]
வெளியீடு27 மே 2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பவர் ஆஃப் உமன் (Power of Women) 2005 தமிழ்த் திரைப்படம், இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயதேவி. இப்படத்தில் குஷ்பூ, ஹரிஹரன், ரியாஸ் கான் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பு வித்தியாசாகர் 2005 மே 27 அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[2]

கதை

ஆத்மா (ஹரிஹரன்) ஒரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற பாடகர் மற்றும் சமூக ஆர்வலர். அவர் தான் சந்திக்கும் பெண்கள் குறித்து மரண சாசனம் என்கிற புத்தகத்தில் எழுதுகிறார். அவர் எழுதிய புத்தகம் சர்ச்சைக்குள்ளானதால் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார். அவரைப் பார்க்க வரும் மாணவர்களிடம், கிராமத்துப் பெண் ஜோதியின் (குஷ்பூ) கதையைக் கூறுகிறான். அவள் சிறு வயதிலேயே திருமணமாகி விதவையானதால் அவளது படிப்பு தடைப்படுகிறது. பின்னர், வெளிநாடு வாழ் இந்தியரான ஷியாமை (ரியாஸ் கான்) மணந்து கொண்டு கனடாவிற்குச் செல்கிறாள்.

அங்கு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு கணவருடன் நன்றாக வாழ்கிறாள். அவளுக்கு தன் கணவன் சட்ட விரோதச் செயலில் ஈடுபடுவது தெரிகிறது. அதனால் கணவனுக்கு எதிராகப் போராடுகிறாள். ஆத்மா அவளை காதலிக்கிறான், அவளுக்கு ஆறுதலையும் கொடுக்கிறார், அதன்பிறகு, ஷியாம் தனது மனைவி மற்றும் ஆத்மாவை சந்தேகிக்கிறார். கனடாவின் சிஎன் கோபுரத்தை அவளது கணவர் வெடிக்க வைக்கப்போகிறார் என்று ஜோதி கேள்விப்பட்டு, காவல் துறைக்கு தகவல் அளிக்கிறாள். அந்த வெடி விபத்தில் ஷியாம் கொல்லப்படுகிறான். இந்தப் படம் பல்வேறு மதங்களின் புனித நூல்களில் பல்வேறு நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

நடிகர்கள்

குஷ்பூ - ஜோதி
ஹரிஹரன் - ஆத்மா
ரியாஸ் கான் - ஷ்யாம்
அமந்தா பிரசாவ்

தயாரிப்பு

பாடகர் ஹரிஹரன் இதில் அறிமுகமானார்.[3] கனடாவின் தொராண்டோ நகரில் ஹரிஹரன் மற்றும் குஷ்பு நடிக்க இதன் படப்பிடிப்பு 2002 வாக்கில் தொடங்கியது .[4]

வெளியீடு

2005இல் வெளியான இப்படம் பல கலவையான விமர்சனத்தைப் பெற்றது..[5] ஜெயதேவியின் கதை ஆரம்பத்தில் வலுவானது என்று குறிப்பிட்டு, சராசரிக்கும் குறைவானது என்ற விமர்சனத்தைப் பெற்றது, ஆனால் "கடைசி சில காட்சிகள் அசாதாரணமாகவும், திறமையுடனும் இருக்கின்றன என்ற விமர்சனத்தையும் பெற்றது[6]

இசையமைப்பு

படத்தின் இசை வித்தியாசாகர்.
மரகத மழைத்துளி நீயே - ஹரிஹரன், சாதனா சர்கம்
மலரே நீ வாழ்க - ஹரிஹரன்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "2005-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்- Lakshman Sruthi - 100% Manual Orchestra -". lakshmansruthi.com. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  2. "Ayngaran International". ayngaran.com.
  3. "TFM Old News Items". tfmpage.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  4. "The Hindu : Secrecy robs the charm". thehindu.com. Archived from the original on 2002-08-08. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  5. "BizHat.com - Power of Woman Review. Hariharan,Kushboo,Riaz Khan". bizhat.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  6. "Power of Women - Tamil movie - It's All About movie - AllIndianSite.com". allindiansite.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பவர்_ஆப்_உமன்&oldid=35310" இருந்து மீள்விக்கப்பட்டது