பழனி சாக்கடை சித்தர்
பழனி சாக்கடை சித்தர் | |
---|---|
பிறப்பு | வட இந்தியா |
தேசியம் | இந்தியர் |
முக்கிய ஆர்வங்கள் | சாக்கடை நீரைக் குடித்தல் மற்றும் அதில் குளித்தல் |
சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார்.[1] இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார்.[2]
சாக்கடை சித்தரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் வடநாட்டிலிருந்து தனது 55 வயதில் பழநிக்கு வந்தார்.[3] பழநிமலையில் முருகன் கோயிலுக்கு செல்லுகின்ற அய்யம்புள்ளி சாலையில் சாக்கடை மேடையின் மீது கூடாரமிட்டு வாழ்ந்தார்.[3] சாக்கடை நீரைப் பகுவதையும், அதிலேயே குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் சாக்கடை சித்தர் என பக்தர்கள் அழைத்தனர்.[3]
யாரிடமும் பேசாமல் இருப்பார். இவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கினர்.[3] உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார்.[3] இவர் 2016 ஆண்டு மே 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.[1]
ஊடகங்களில்
தமிழ் தொலைக்காட்சியான வேந்தர் தொலைக்காட்சியில் மூன்றாவது கண் என்ற தொடரின் 35 வது நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய செய்திகளுடன் நேரில் சென்று கண்ட நிருபரின் அனுபவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 "பழனியில் சாக்கடை சித்தர் சித்தியானார்". http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/05/28/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/article3454229.ece.
- ↑ "குளித்தலையில் "சாக்கடை சித்தர்' மரணம்". http://www.dinamani.com/edition_trichy/karur/2013/11/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/article1893490.ece.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "பழநி "சாக்கடை சித்தர்' மருத்துவமனையில் அனுமதி". http://www.dinamalar.com/news_detail.asp?id=1458606.