பல சில புணர்ச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில் பல,சில எனும் சொற்கள் பிற சொற்களுடனோ அல்லது பல + பல, சில + சில என்ற அடிப்படையில் இணைவது பல சில புணர்ச்சி என்பர்.

நன்னூல் விதி 170

"பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்

இயல்பும் மிகலும் அகரம் ஏக

லகரம் றகரம் ஆகலும் பிறவரின்

அகரம் விகற்பம் ஆகலும் உளபிற"

விளக்கம்

பல,சில என்னும் சொற்கள் தம்முன் தாமே வரும் போது பல+பல / சில + சில என்பவை பல பல / சில சில என்று இயல்பாகவும், பலப்பல/சிலச்சில என்று வல்லொற்று மிகுத்தும், நிலைமொழியில் அமைந்த பல,சில ஆகிய சொற்களின் ல எனும் எழுத்தில் அகரம் கெட்டு பின் ல் ஆனது ற் ஆக புணரும்,

எ.கா :- பல + பல = பற்பல

எ.கா :- சில + சில = சிற்சில

பல,சில என்னும் சொற்களுக்குப் பின் பிற சொற்கள் வரும் போது பல,சில ஆகிய சொற்களின் ல எனும் எழுத்தில் வேறு சில வகை மாற்றங்களில் கூட புணரலாம்.

எ.கா :- பல+கலை = பல்கலை

எ.கா :- சில + வலை = சில்வலை

எ.கா :- பல + நலம் = பன்னலம்

கருவி நூல்

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

"https://tamilar.wiki/index.php?title=பல_சில_புணர்ச்சி&oldid=20628" இருந்து மீள்விக்கப்பட்டது