பற்தூரிகை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பற்தூரிகை என்பது பல் துலக்கப் பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் பற்பசை சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின்றன. இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்படும் தூரிகைகளும் உண்டு. வேப்பங்குச்சி போன்றனவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தும் வழக்கமும் தமிழர் மத்தியில் உண்டு.("ஆலும் வேலும் பல்லுக்குறுதி." என்ற கூற்று. )பற்தூரிகைகள், தூரிகையின் கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. பல் மருத்துவர்கள் மென்மையான தூரிகையுள்ள பற்தூரிகைப் பயன்பாடே பற்சுகாதாரத்துக்குப் பொருத்தமானது என்கிறார்கள்.
மின் பற்தூரிகை
மின்சாரத்தில் இயங்கும் பற்தூரிகை முதன்முதலில் 1939 இல் உருவாக்கப்பட்டது. ஆயினும் 1960களிலேயே பரவலான விற்பனைக்கு வந்தது.