பருன் மசூம்தர்
பருன் மசூம்தர் Barun Mazumder | |
---|---|
பிறப்பு | 9 செப்டம்பர் 1942 |
இறப்பு | 14 அக்டோபர் 2019 | (அகவை 77)
படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிகையாளர், செய்தி வாசிப்பாளர்,எழுத்தாளர், ஆசிரியர் |
பருன் மசூம்தர் (Barun Mazumder) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். செய்தி வாசிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களுடன் இவர் செயல்பட்டார். இலக்கியம் மற்றும் கல்வியில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருது பெற்றார். [1] [2] [3]
சுயசரிதை
மசூம்தர் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் [4] 1965 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் [5]
மசூம்தர் பத்து வருடங்கள் டைனிக் பாசுமதி என்ற வங்காள மொழி பத்திரிகையில் பணியாற்றினார். [4] வங்காளதேச விடுதலைப் போரின் போது இவர் வங்காள தேசத்தில் போர் நிருபராக இருந்தார். தவிர கொல்கத்தா அனைத்திந்திய வானொலியில் பத்திரிகையாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். [5]
மசூம்தர் கற்பித்தல் மற்றும் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். [4] அவர் பசே சிப்பூர் பி.கே.பால் நிறுவனத்தின் ஆசிரியராக இருந்தார். [4] தவிர, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் மிட்னாபூர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். [4] இலக்கியம் மற்றும் கல்வியில் இவரது பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
மசூம்தர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இறந்தார். [4]
மேற்கோள்கள்
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
- ↑ "Padma Shri Award Winners". 25 January 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ "Padma Awards 2011: The winners". 26 January 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "প্রয়াত 'পদ্মশ্রী' বরুণ মজুমদার" (in Bengali). 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ 5.0 5.1 "প্রয়াত আকাশবাণীর প্রাক্তন সাংবাদিক 'পদ্মশ্রী' বরুণ মজুমদার" (in Bengali). 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.