பரிவர்த்தனை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரிவர்த்தனை
இயக்கம்எஸ். மணிபாரதி
தயாரிப்புபொரி செந்திவேல்
இசைரஷாந்த் அர்வின்
நடிப்பு
  • சுர்ஜித்
  • சுவாதி
  • ராஜேஸ்வரி
ஒளிப்பதிவுகே. கோகுல்
படத்தொகுப்புரோலக்ஸ்
கலையகம்எம்எஸ்வி புரொடக்சன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 2023 (2023-09-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரிவர்த்தனை (Parivarthanai) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மணிபாரதி இயக்கிய இப்படத்தில் சுர்ஜித், சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2023 செப்டம்பர் 15 அன்று வெளியானது. [1] [2]

நடிகர்கள்

  • நவீனாக சுர்ஜித் கோபிநாத்
  • பவித்ராவாக சுவாதி
  • நந்தினியாக ராஜேஸ்வரி
  • பாரதி மோகன்
  • திவ்யா ஸ்ரீதர்
  • மோகித்
  • ஸ்மேஹா
  • சித்ரா நவீனின் தாயாக (ஒளிப்படத்தில்)

தயாரிப்பு

இயக்குனர் எஸ். மணிபாரதி தனது மற்றொரு படமான ஸ்ரீகாந்த் நடித்த தி பெட் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் ஈடுபட்டடுவரும் நிலையில், இப்படத்தில் பணியாற்றினார். [3] பல தொலைக்காட்சி நடிகர்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். [4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வி. ஜே. பி. ரகுபதி எழுதியுள்ளார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நெஞ்சுக்குள்ள... நெஞ்சுக்குள்ள"  சாம் விஷால் 03:42
2. "சின்னஞ்சிறு மனசுக்குள்ள.."  செல்தில் தாஸ், இராஜலட்சுமி 02:42

வரவேற்பு

இப்படத்தை வெளியிட திட்டமிட்ட நாளில் இருந்து ஒரு வார தாமதத்திற்குப் பிறகு, படம் 2023 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் படம் வெளியானது. [5] தினத்தந்தியின் ஒரு விமர்சகர், படத்தின் சில காட்சிகளில் இருந்த "தர்க்கப்பிழையை" கேள்விக்குட்படுத்தி படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார். [6] மாறாக மாலை மலரின் ஒரு விமர்சகர், படத்தை "இரசிக்கதக்கது" என்று குறிப்பிட்டார். [7]

மேற்கோள்கள்

  1. "Parivarthanai" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  2. "Parivarthanai Movie Review" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  3. Bureau, N. T. (2022-01-06). "'The Bed' is a suspense thriller" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  4. "சின்னத்திரை கலைஞர்கள் உருவாக்கிய பரிவர்த்தனை". 2023-01-01. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  5. https://www.filmibeat.com/tamil/news/2023/7-direct-tamil-movies-releasing-this-week-in-theatres-to-compete-with-shah-rukh-khans-jawan-here-i-363969.html
  6. தினத்தந்தி (2023-09-18). "பரிவர்த்தனை - சினிமா விமர்சனம்". பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  7. maalaimalar (2023-09-14). "Parivarthanai". Archived from the original on 2023-09-27. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.

வெளி இணைப்புகள்