பரிசுத்த திரித்துவ ஆலயம், ஊட்டி
பரிசுத்த திரித்துவ தேவாலயம் (Holy Trinity Church) இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள உதகமண்டலத்தில் அமைந்து உள்ளது. இது ஊட்டியின் மிகப் பழைய நிலக்குறி அல்லது அடையாளம் ஆகும். இந்த கட்டிடம் ஆரம்ப காலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் ஆகவும் மற்ற நாட்களில் பள்ளி ஆகவும் செயல்பட்டு வந்தது. 1858 இல் இருந்து இது தேவாலயம் ஆக மட்டும் செயல்பட்டு வருகிறது.
ஜார்ஜ் உக்லோ போப் எனும், தமிழ் புலமை பெற்ற ஆங்கிலேயர்தான் இந்த தேவாலயத்தின் வளர்ச்சியில் அதிகம் பங்கேற்றார். இவர் அநேக தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளும் அதில் அடக்கம் ஆகும். 185 – 59 வரை இத்தேவாலயத்தின் பாதிரியாராக இருந்தார். இச்சபையில் ஏறக்குறைய 700 குடும்பங்கள் இருக்கின்றனர். ஏழு சிறு சபைகள் இந்த சேகரத்தோடு (தலைமை ஆலயம்) இணைக்கப்பட்டுள்ளது. அவை பரிசுத்த தோமாவின் ஆலயம் ஊட்டி, பரிசுத்த யோவானின் ஆலயம் கண்டல், இம்மானுவேலின் ஆலயம் கெந்தொரை, அனைத்து பரிசுத்தவான்களின் ஆலயம், தோடா காலனி, பரிசுத்த பவுலின் ஆலயம் முதோரை, கிறிஸ்துவின் ஆலயம், தோமண்ட், ஆகும். இந்த வருடம் இந்த ஆலயம் தனது 150 ஆவது பிரதிஷ்டை வருடமாக கொண்டாட இருக்கிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Stage set for sesquicentennial celebrations of Ooty church". Archived from the original on 2010-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.