பயன்பாட்டு மொழியியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

பயன்பாட்டு மொழியியல் அல்லது பயனாக்க மொழியியல் என்பது, மொழியியலின் ஒரு பிரிவாகும். இது மொழியியற் கோட்பாடுகளை உலகின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இது மொழிக் கல்வி, இரண்டாம் மொழிகற்றல் போன்ற துறைகளிலேயே அதிகம் பயன்பட்டு வந்தது. இத்துறை மொழி கற்றல் ஆய்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பவர்களுக்கும், இல்லை, இது மொழியியற் கோட்பாடுகளின் பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்குகிறது என்போருக்கும் இடையே தொடர்ச்சியான இழுபறிநிலை இருந்து வந்தது. தற்காலத்தில், மொழியியல் தொடர்பான அறிவு பல்வேறுபட்ட அறிவுத்துறைகளுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. இலக்கியம், நாட்டுப்புறவியல், அகராதியியல், சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளிலும், உளவியல், கணினி அறிவியல், நரம்பியல், தகவல் தொடர்பியல் போன்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் மொழியியலின் தேவை பெருமளவுக்கு உணரப்பட்டுள்ளது[1]. இத்துறைகளிலான ஆய்வுகளில் மொழியியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்புகள்

  1. கருணாகரன், கி., ஜெயா, வ., 2007.பக். 153.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.


"https://tamilar.wiki/index.php?title=பயன்பாட்டு_மொழியியல்&oldid=11585" இருந்து மீள்விக்கப்பட்டது