பன்மணிமாலை
Jump to navigation
Jump to search
பன்மணிமாலை' என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக ஏனைய இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றதே பல்மணிமாலை எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1].
அம்மானை, ஊசல், ஒருபோகு, இன்றி வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் கடைமுடிவிலே வெள்ளை விருத்தம் ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலையென்று வழங்கப்படும்[2].
இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருட் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்
குறிப்புகள்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.