பன்னீர்செல்வம் பூங்கா
பன்னீர்செல்வம் பூங்கா (Panneerselvam Park) அல்லது பி.எஸ். பார்க் என்பது தமிழ்நாட்டின் ஈரோடு நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக மையமாகும்.
வரலாறு
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தப் பகுதி ஏராளமான மரங்களுடன் தோட்டங்களின் இருப்பைக் கொண்டிருந்தது. ஈரோடு நகராட்சி மன்றத்தின் அப்போதையத் தலைவரான வேல்சு என்பவரின் பெயரில் இது வேல்சு பூங்கா என்று அழைக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டில், நீதிக் கட்சித் தலைவர் ராவ் பகதூர் சர் அ. தா. பன்னீர்செல்வத்தின் நினைவாக பெரியார் ஈ. வெ. இராமசாமி என்பவரால் இது பன்னீர்செல்வம் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. [1] அதன் பெயரின் முக்கியத்துவத்திற்காக, இந்த வட்டாரத்தின் மையத்தில் உள்ள ஐந்து சாலை சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய பூங்கா ஈரோடு மாநகராட்சியால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 1971இல், இந்த இடத்தில் தமிழகத்தின் முன்னால் முதல்வர் கா.ந. அண்ணாதுரையின் சிலை அமைக்கப்பட்டது. 1971 செப்டம்பரில், ஈ.வெ. இராமசாமியின் முழு அளவிலான சிலையும் நிறுவப்பட்டது. [2]
புதுப்பித்தல் பணி
2017ஆம் ஆண்டில், சாலை விரிவாக்கத்திற்கான இடத்தை வழங்குவதற்காக பூங்கா இடிக்கப்பட்டு, தலைவர்களின் சிலை புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வரும் வேட்பாளர்களுக்கு சேவை செய்வதற்காக ஒரு பிரத்யேக நூலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. [3]
பிற நிறுவனங்கள்
வட்டாட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களும், அப்துல் கனி துணி சந்தை போன்ற வணிக மையங்களும் இருப்பதால், இந்த பகுதி ஈரோட்டின் வர்த்தக மையமாக மாறியுள்ளது. ஒரு மணிக்கூட்டுக்கோபுரம் இந்த பகுதியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. [4] இதனருகில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. [5]
வழிபாட்டு இடங்கள்
இந்தப் பகுதியில் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன
- பெரிய மாரியம்மன் கோயில்
- சி.எஸ்.ஐ பிரப் நினைவு தேவாலயம்
மேற்கோள்கள்
- ↑ "பன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி?". Dinakaran இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180806125053/http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=123. பார்த்த நாள்: 7 August 2018.
- ↑ "Periyar, Anna statues to be shifted to a safer place". https://www.thehindu.com/todays-paper/periyar-anna-statues-to-be-shifted-to-a-safer-place/article2014996.ece. பார்த்த நாள்: 7 August 2018.
- ↑ "Stalin in Erode tomorrow". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/stalin-in-erode-tomorrow/article19584510.ece. பார்த்த நாள்: 7 August 2018.
- ↑ "Deepavali shoppers throng roads in Erode". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Deepavali-shoppers-throng-roads-in-Erode/article15671777.ece. பார்த்த நாள்: 7 August 2018.
- ↑ "Plea for installing Thiruvalluvar statue". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-installing-thiruvalluvar-statue/article22460035.ece. பார்த்த நாள்: 7 August 2018.