பன்னாலால் பட்டேல்
பன்னலால் நானாலால் படேல் (ஆங்கிலம்: Pannalal Nanalal Patel ) (பிறப்பு: 7 மே 1912 - இறப்பு: 6 ஏப்ரல் 1989)இவர் குஜராத்தி இலக்கியத்தில் தனது பங்களிப்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு இந்திய எழுத்தாளராவார். சுக்துக்னா சாதி (1940) மற்றும் வத்ரக்னே காந்தே (1952) போன்ற 20 க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், 20 க்கும் மேற்பட்ட சமூக புதினங்களான மாலேலா ஜீவ் (1941), மன்வினி பவாய் (1947) மற்றும் பங்க்யானா பெரு (1957), மற்றும் பல புராண நாவல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1985 ஆம் ஆண்டில் மன்வினி பவாய் என்ற படைப்பிற்காக ஞானபீட விருதைப் பெற்றார். இவரது சில படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டதோடு நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. [1]
வாழ்க்கை
அவர் 7 மே 1912 இல் ராஜஸ்தானின் துங்கர்பூரில் மாண்ட்லி கிராமத்தில் நானாசா அக்கா நானாலால் மற்றும் கிராபா ஆகியோருக்கு அஞ்சனா சவுதாரி குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது நான்கு உடன்பிறப்புகளில் இளையவர் ஆவார். அவரது தந்தை ஒரு விவசாயி மற்றும் அவரது கிராமத்துக்காக இராமாயணம், ஓககரன் மற்றும் பிற புராணக் கதைகளை மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். இது அவரது வீட்டிற்கு "கற்றல் உறைவிடம்" என்ற புனைப்பெயரைப் பெற்றது. அவரது தந்தை இவரது குழந்தை பருவத்திலேயே இறந்துபோனார். அவரது தாயார் கிராபா குழந்தைகளை வளர்த்து வந்தார்.
அவரது கல்வி வறுமை காரணமாக பல சிரமங்களுடன் முன்னேறியது. இதர் சர் பிரதாப் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். பள்ளி நாட்களில், அவர் தனது பள்ளித் தோழர் உமாசங்கர் சோசியுடன் நட்பு கொண்டிருந்தார். பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு, துங்கர்பூரில் ஒரு மதுபான உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். குஜராத்தின் அகமதாபாத்தில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்தபோது தனது முதல் புதினத்தை எழுதினார். [2]
1936 ஆம் ஆண்டில், தற்செயலாக தனது பழைய நண்பர் உமாசங்கர் சோசியைச் சந்தித்தபோது அவர் பன்னாலாலை எழுத தூண்டினார். அவர் தனது முதல் சிறுகதையான செத் நி சார்தா (1936) என்பதை எழுதினார். பின்னர், அவரது கதைகள் பல குஜராத்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. [3] 1940 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் புதினமான வலமனா (தி செண்ட் -ஆஃப்) படைப்பின் மூலம் அங்கீகாரம் பெற்றார். அதைத் தொடர்ந்து மாலேலா சீவ் (1941), மன்வினி பவாய் (1947) மற்றும் பல புதினங்களை எழுதினார். 1971 ஆம் ஆண்டில், தனது இரண்டு மகன்களுடன் அகமதாபாத்தில் சாதனா என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். பிற்காலத்தில், அவர் பெரும்பாலும் இந்து புராணங்களையும் காவியங்களையும் அடிப்படையாகக் கொண்ட பல புதினங்களை எழுதினார். [2] [4]
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 6 ஆம் தேதி அகமதாபாத்தில் இறந்தார். [2]
படைப்புகள்
அவர் 61 புதினங்கள், 26 சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பல படைப்புகளை எழுதினார். [5] அவர் தனது படைப்புகளை பெரும்பாலும் வடக்கு குஜராத்தில் உள்ள சபர்காந்தா மாவட்டத்தின் சொந்த மொழிகளில் எழுதினார். [6]
அங்கீகாரம்
1950 ல் இரஞ்சித்ராம் சுவர்ண சந்திராக் மற்றும் 1985 ல் ஞானபீட விருதை ஆகிய விருதுகளை பெற்றார். 1967 ஆம் ஆண்டில் உமாசங்கர் சோசிக்குப் பிறகு ஞானபீட விருதைப் பெற்ற குஜராத்தி மொழியின் இரண்டாவது எழுத்தாளர் ஆவார். [2] 1986 ஆம் ஆண்டில், அவர் சாகித்ய கௌரவ் புரஸ்கார் என்ற விருதைப் பெற்றார்.
குறிப்புகள்
- ↑ Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. பக். 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-28778-7. https://books.google.com/books?id=1lTnv6o-d_oC&pg=PA117. பார்த்த நாள்: 6 December 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "પન્નાલાલ પટેલ, ગુજરાતી સાહિત્ય પરિષદ" (in gu). http://www.gujaratisahityaparishad.com/prakashan/photo-gallery/sahitya-sarjako/Pannalal-Patel.html.
- ↑ (in gu) 'મળેલા જીવ' નવલકથામાં ગ્રામચેતના. http://www.kcgjournal.org/humanity/issue3/sanjay.php. பார்த்த நாள்: 8 December 2016.
- ↑ Modern Indian Literature, an Anthology: Surveys and poems. https://books.google.com/books?id=m1R2Pa3f7r0C&pg=PA136. பார்த்த நாள்: 6 December 2016.
- ↑ Pratibha India. A. Sitesh. 1989. https://books.google.com/books?id=SyBaAAAAMAAJ.
- ↑ Manavini Bhavai (English translation). Sahitya Akademi. 1995. https://books.google.com/books?id=GbCrilYTGZEC&pg=PR5.