பனையபுரம் அதியமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நிதி (சென்னை கம்பன் கழகம்)
பனையபுரம் அதியமான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பனையபுரம்
அதியமான்
பிறப்புபெயர் இரா. ப. அதியமான்
பிறந்ததிகதி அக்டோபர் 4, 1958
பிறந்தஇடம் புதுச்சேரி,
 இந்தியா.
பணி பொது மேலாளர்
(பணி நிறைவு)
தேசியம் இந்தியர்
கல்வி முதுகலை (வரலாறு) பட்டம்
பணியகம் சென்னை மாவட்ட
மத்தியக் கூட்டுறவு வங்கி,
சென்னை.
அறியப்படுவது எழுத்தாளர்
பெற்றோர் புலவர் இராம.
பழனிச்சாமி (தந்தை),
ருக்குமணி
அம்மாள் (தாய்)
துணைவர் சுசிலா
பிள்ளைகள் முனைவர் ப. அ. பாலகுமாரன் (மகன்)
இணையதளம் Website

பனையபுரம் இரா. ப. அதியமான், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இராம. பழனிச்சாமி - ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு அக்டோபர் 4, 1958ஆம் நாளில் பிறந்தார். சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளாராக பணியாற்றிய அதியமான் 2016-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூகம் மற்றும் பகுதி நேர வானொலி செய்தி வாசிப்பாளர் எனப்பன்முகத் தன்மை கொண்டவர்.

படைப்புகள்

நூல்கள்

பனையபுரம் அதியமானின் படைப்புகளில் திருத்தலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக் குறிப்புகள், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்புகளைக் கூறும். இவர் இயற்றிய ஆன்மீக நூல்கள் பின்வருமாறு:

  1. சேய்த் தொண்டர்கள் (முருகனடியார்கள் வரலாறு - நூல்)[1][2]
  2. அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்[3]
  3. ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்[4]
  4. தெய்வமணம் கமழும் திருத்தலங்கள்
  5. திருப்பம் தரும் திருக்கோயில்கள்
  6. அறிய வேண்டிய அபூர்வ கோயில்கள்
  7. திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

நூல்கள்

பனையபுரம் அதியமானின் படைப்புகளில் திருத்தலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக் குறிப்புகள், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்புகளைக் கூறும். இவர் இயற்றிய ஆன்மீக நூல்கள் பின்வருமாறு:

  1. சேய்த் தொண்டர்கள் (முருகனடியார்கள் வரலாறு - நூல்)[5][6]
  2. அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்[7]
  3. ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்[8]
  4. தெய்வமணம் கமழும் திருத்தலங்கள்
  5. திருப்பம் தரும் திருக்கோயில்கள்
  6. அறிய வேண்டிய அபூர்வ கோயில்கள்
  7. திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்

2013-ஆம் ஆண்டில் பனையபுரம் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45 சி-ஐ விரிவாக்கம் செய்த போது, பனங்காட்டீஸ்வரர் கோயிலை அகற்றிட அரசு முனைந்தது. பனையபுரம் அதியமான் சிவ பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அறவழியில் போராடி பனங்காட்டீஸ்வரர் கோயிலை நெடுஞ்சாலைத் துறையால் இடிக்கப்படாமல் பாதுகாததார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பனையபுரம்_அதியமான்&oldid=5005" இருந்து மீள்விக்கப்பட்டது